வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.45.62 லட்சம் காணிக்கை
17 Jun 2026, 9:26 pm
<p><strong>வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.45.62 லட்சம் காணிக்கை</strong></p><p>தேனி, ஜூன் 17- தேனி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வீரபாண்டி கௌமாரியம்மன் திருக் கோவிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.45 லட்சத்து 62 ஆயிரத்து 708 காணிக்கையாக கிடைத் தது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக் கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து காணிக்கை செலுத்தியிருந்தனர். இத னால் நிரம்பியிருந்த 12 உண்டியல்கள் செவ்வாய்க் கிழமை திறக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தின் மேற்பார்வையில் காணிக் கைகள் எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணிக்கை யில் மொத்தமாக ரூ.45,62, 708 ரொக்கப் பணம் கிடைத் தது. மேலும், பக்தர்கள் காணி க்கையாக செலுத்திய தங்க மோதிரம், சங்கிலி, தங்கக் காசு உள்ளிட்ட பொருட்க ளும் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 42 கிராம் தங்க மும், 369 கிராம் வெள்ளிப் பொருட்களும் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரி வித்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் அலுவ லர்கள், வங்கிப் பணியா ளர்கள் மற்றும் தன்னார் வலர்கள் என 50-க்கும் மேற் பட்டோர் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கோயில் உதவி ஆணையர் நாக வேல், ஆய்வாளர் கார்த்தி கேயன், செயல் அலுவலர் சுபிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
