வீரபாண்டி கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள்; ஆட்சியர், எஸ்பி ஆய்வு
11 May 2026, 11:54 pm
<p><strong>வீரபாண்டி கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள்; ஆட்சியர், எஸ்பி ஆய்வு</strong></p><p>தேனி, மே 11- வீரபாண்டி கௌமாரியம்மன் கோவி லில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ள தையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சி யர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மரு.சினேஹாப்ரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா 12.5.2026 முதல் 19.5.2026 வரை நடைபெற உள்ளது. தேரோட்ட திருவிழா 15.5.2025 அன்று நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்திட ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, தற்கா லிக பந்தல்கள், தற்காலிக கழிப்பிட வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கட்டண மில்லா இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும், பக்தர்கள் வச திக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மின் விளக்கு கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக பொது சுகாதாரத்துறையின் சார்பில் இல வச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள் ளதையும் நேரில் பார்வையிட்டார்.</p>
