வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு
11 hours before

வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு

சிதம்பரம், செப். 5காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாகக் கீழணைக்கு வந்தது. கீழணையிலிருந்து வடவாறு மூலம் வீராணம் ஏரிக்குத் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் கோவிந்தராஜ் கூறுகையில், "வீராணம் ஏரிக்குத் தற்போது கல்லணையிலிருந்து விநாடிக்குச் சுமார் 140 கனஅடித் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காகத் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது" என்றார்.

வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருந்த விவசாயிகள், ஏரியின் நீர்மட்டம் உயர்வதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.