தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீரமணி மீதான போக்சோ வழக்கு – காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு!

yesterday
வீரமணி மீதான போக்சோ வழக்கு – காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு!

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி (84) மீதான போக்சோ வழக்கில், தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்துறையின் பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவிடம் பென்டிரைவ் ஒன்றை ஒப்படைத்ததாகவும், அதை ஆய்வு செய்த போது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருந்ததாகவும், அந்த வீடியோவில் இருப்பவர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி என காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து, சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ தொடர்பான டிஜிட்டல் தகவல்களில் அது 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருப்பதாகவும் கூறி, காவல்துறை முதலில் வழக்கில் “further action dropped” அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, விசாரணையைத் தொடர காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 29, 2026 அன்று வீரமணி, அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மகேந்திர சிம்ஹன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி (84) மீதான போக்சோ வழக்கில், தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்டு, வழக்கை கையாண்ட காவல் ஆய்வாளர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து, வழக்கில் பணம் கைமாறியதா என விசாரிக்க காவல்துறை கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் குழு அமைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.