கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
25 Sept 2026, 10:12 pm

கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

சமூகக் குழந்தைகளின் ஏழ்மையைப் பயன்படுத்தி வீரமணி உள்ளிட்டோர் கொடூரமான செயலில் ஈடுபட்டதாகவும், ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு சிறையில்தற்கொலை என்று மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டி வீரமணியை உயிரோடு பாதுகாக்க தேவைப்பட்டால் தனிச்சிறையில் வைக்க வேண்டும் எனவும் கோரினார். இந்த வழக்கை அரசியலாக்க விரும்பவில்லை எனவும், வழக்கை முடிக்காமல் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி பத்மாவை தமது கட்சி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு காவல் அதிகாரி செய்த தவறை இன்னொரு அதிகாரி விசாரிப்பதை ஏற்க முடியாது எனவும், காவலர் முதல் ஆணையர் வரை குற்றவாளிகளாக இருக்கும் நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்புபுலனாய்வுக் குழு, காலவரம்புடன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சியும் மாதர் சங்கமும் தலையிடாத பாலியல் வன்கொடுமை வழக்கு எதுவும் இல்லை எனவும், எங்களது நிலைப்பாட்டைக் கேட்பதற்கு முன் அரசின் நிலை என்ன எனச் சொல்லுமாறு அமைச்சர்களைக் கேட்டுக்கொண்ட அவர், குற்றவாளிகள் தப்பாத புதிய வரலாற்றைப் படைக்க தவெகவுக்கு வாய்ப்பு கிடைத்துஉள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.