வேடசந்தூர் அருகே தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம்
12 Jun 2026, 10:05 pm
<p><strong>வேடசந்தூர் அருகே தனியார் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம் </strong></p><p>ஒட்டன்சத்திரம், ஜூன்.12- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வடமதுரை சாலையில் தனியார் பள்ளி வேன் மாரம்பாடியில் இருந்து தேவகவுண்டன்பட்டிக்கு பள்ளி 15 மாணவ, மாணவிகளுடன் மாணவர்களுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பள்ளி வேனை ராஜா (வயது 30) என்பவர் ஓட்டிச் சென்றார். கோட்டைமந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பள்ளி வேன் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கவிழ்ந்த வேனில் இருந்து மாணவ மாணவிகளை பத்திரமாக மீட்டு வேடசந்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்</p>
