தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேடசந்தூர் அருகே விபத்தில் சேதமடைந்த மின் கம்பம் சாலையில் கிடப்பதால் விபத்து அபாயம்

19 Jun 2026, 10:25 pm
வேடசந்தூர் அருகே விபத்தில் சேதமடைந்த மின் கம்பம் சாலையில் கிடப்பதால் விபத்து அபாயம்
<p><strong>வேடசந்தூர் அருகே விபத்தில் சேதமடைந்த மின் கம்பம் சாலையில் கிடப்பதால் விபத்து அபாயம் </strong></p><p>ஒட்டன்சத்திரம், ஜூன் 19- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் ஸ்ரீராமபுரம் என்ற ஊருக்கு முன்பு வெள்ளிக்கிழமை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. உடனடியாக மின்சாரம் துண்டித்ததால் பெரும் விபத்து ஏற்படவில்லை. இந்த விபத்தில் சேதமடைந்த மின்சார கம்பம் உடைந்து சாலையோரம் விழுந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வேடசந்தூர் மின்சார வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்சார கம்பத்தை அகற்றுவதற்கும் புதிய மின் கம்பம் அமைத்து மின்சாரம் வழங்குவதற்கும் பல மணி நேரமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலையில் மின்சார கம்பம் சாலையில் கிடந்தால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் உடைந்த மின்சாரக்கத்தின் மீது மோதி பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு உடைந்த மின்சார கம்பத்தை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.