தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேதபாறை ஓடையில் தடுப்பணை கட்டும் பணி நிறைவு பல வருட கோரிக்கை நிறைவேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

3 Jun 2026, 10:54 pm
வேதபாறை ஓடையில் தடுப்பணை கட்டும் பணி நிறைவு  பல வருட கோரிக்கை நிறைவேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

வேதபாறை ஓடையில் தடுப்பணை கட்டும் பணி நிறைவு பல வருட கோரிக்கை நிறைவேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோபி, ஜூன் 3- வேதபாறையின் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி கள் நிறைவடைந்துள்ளதால், பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கணக் கம்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஒன்னரைகரடு, நெல்லிக்காய்திட்டு, ஒளிஞ்சோரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழைநீர், கட்டாறாக மாறி, வேதபாறை ஓடை வழியாக பவானி அற்றில் கலந்து வந்தது.

கடந்த 1997 ஆம் ஆண்டு வேத பாறை ஓடையின் குறுக்கே ரூ.6.96 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.

ஆனால், சில நாட்களி லேயே வனப்பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கால், தடுப்பணை யின் இருபகுதியை வெள்ளம் அடித்து சென்றது

. இதனை தொடர்ந்து வேதபாறை நீர்தேக்க பாசன விவசாயிகள் சங்கத்தின் சார் பில் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் இணைந்து வேதபாறை ஓடை பகுதி யில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சார்பில் வேத பாறையில் நீர்தேக்கம் அமைக்க ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அப்போது அணை அமைக்கும் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தடையின்மை சான்று வழங்க முடியாததால் வேத பாறை நீர் தேக்கம் அமைக்கும் திட் டம் கைவிடப்பட்டது. ஆண்டுதோறும் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் வேதபாறை ஓடை யின் வழியாக பவானி ஆற்றில் கலந்து வந்தது. இதனால் தண்ணீரை சேமிக்க வேண்டி வேதபாறை நீர் தேக்க பாசன விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

மேலும், பத்மஸ்ரீ விருது பெற்ற மருத் துவர் பழனிசாமி மற்றும் திமுக முன் னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், டி. என்.பாளையம் ஒன்றியச் செயலா ளர் சிவபாலன், ஆகியோர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத் திற்கு கொண்டு சென்றனர்.

வேத பாறை ஓடையின் குறுக்கே தடுப் பணை அமைத்து கணக்கம்பாளை யம், பெருமுகை, கொண்டையம் பாளையம் உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில் உள்ள 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட் டம் உயரவும் குடிநீர் தேவை பூர்த்தி அடையும் என்பதை வலி யுத்தி வேதபாறை ஓடையின் குறுக்கே தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியு றுத்தினர்.

இதனடிப்படையில் கடந்த 2025-26 ஆம் ஆண்டு நிதி நிலையில் தமிழக அரசு வேதபாறை ஓடையின் குறுக்கே சுமார் 10ஏக்கர் பரப்பளவில் 240அடி நீளத்தில், சுமார் 7அடி உயரத் தில் ரூ.6 கோடியே 96இலட்சம் மதிப் பீட்டில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக் கியது.

தொடர்ந்து வேதபாறை ஓடை யில் நீர்வளத்துறையினர் அளவீடு பணிகளை முடித்து கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேதபாறை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

முழுவீச்சில் நடைபெற்று, கடந்த சில தினங்க ளுக்கு முன் தடுப்பணை கட்டும் பணி கள் நிறைவுற்றன.

இதனால் பருவ மழையின்போது வேதபாறை தடுப் பணையில் நீர் தேங்கினால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவ சாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் ஏது வாக அமையும்.

மேலும், வனபகுதியி லிருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவது தவிர்த்து வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் தடுப்பணையாக விளங்கும் என்ப தால் வேதபாறை நீர் தேக்க பாசன விவசாயிகளின் பல வருட கோரிக்கை நிறைவேறியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.