தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேதாந்தா மின் நிலையத்தில் நிகழ்ந்த கோர விபத்து: 600 டிகிரி ஆவி மழையில் 25 தொழிலாளர்கள் பலி தொழிலாளர் கொந்தளிப்புக்கு காரணமான கொடூரம்

13 May 2026, 9:29 pm
வேதாந்தா மின் நிலையத்தில் நிகழ்ந்த கோர விபத்து: 600 டிகிரி ஆவி மழையில் 25 தொழிலாளர்கள் பலி தொழிலாளர் கொந்தளிப்புக்கு காரணமான கொடூரம்

வேதாந்தா மின் நிலையத்தில் நிகழ்ந்த கோர விபத்து: 600 டிகிரி ஆவி மழையில் 25 தொழிலாளர்கள் பலி தொழிலாளர் கொந்தளிப்புக்கு காரணமான கொடூரம்

வேலைநிறுத்தம் 14

சக்தி மாவட்டம், மே 13 - சத்தீஸ்கர் மாநிலத்தின் தொழில்துறை வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக அமைந்தது சக்தி (Sakti) மாவட்டத்தின் சிங்கிதாராய் (Singhitarai) கிராமத்தில் அமைந்துள்ள வேதாந்தா அனல் மின் நிலைய விபத்து. புதிய தொழிலாளர் சட்ட ங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தொழிலாளர்களின் பாது காப்பைப் பலிபீடத்தில் ஏற்றுவதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. இத்தொடரின் 14ஆவது பகுதியில், 2026-இன் வேலை நிறுத்த அலைகளுக்கு முக்கியத் திருப்பு முனையாக அமைந்த இந்தத் துயரச் சம்பவத்தைப் பார்ப்போம்.

சிங்கிதாராய் கிராமத்தில் 1,200 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட வேதாந்தா அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் (Unit 1), கடந்த மாதம் நிகழ்ந்த கோர விபத்தில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 36-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்தது எப்படி?

ஏப்ரல் மாதம் ஒரு நாள் மதியம் 2 மணி யளவில், மின் நிலையத்தின் கொதிகலன் (Boiler) உலையில் நிலக்கரி அதிகப்படி யாகக் குவிந்ததால், உயர் அழுத்த நீராவி குழாய் (Steam tube) திடீரென வெடித்தது. இதிலிருந்து வெளியேறிய சுமார் 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட ‘சூப்பர் ஹீட்டட்’ நீராவி, அந்தப் பகுதியில் பணி யில் இருந்த தொழிலாளர்கள் மீது ‘மழை’ போலப் பொழிந்தது.

விபத்து நடந்த சமயம் உணவு இடை வேளை என்பதால், பல தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டனர். “ஒரு ஏவுகணை வந்து விழுந்தது போன்ற பெரும் சத்தம் கேட்டது; எங்கும் புகையும் அலறல் சத்தமுமே இருந்தது” என நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர். காய மடைந்தவர்கள் ராய்கர் மற்றும் ராய்ப்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர தீக்காயங்களால் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

நிர்வாகத்தின் அலட்சியமும் ‘பிசினஸ் பார்ட்னர்’ முறையும்

இந்த ஆலையின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை என்.எஸ்.ஜி.எல் (NSGL) என்ற துணை ஒப்பந்த நிறுவனத்தி டம் வேதாந்தா ஒப்படைத்திருந்தது. விபத்து நடந்தவுடன், “இது ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பு” எனக் கூறி வேதாந்தா நிர்வாகம் தட்டிக்கழிக்க முயன்றது. ஆனால், “அபாய கரமான பணிகளை ஒப்பந்தத் தொழிலா ளர்களைக் கொண்டு மேற்கொள்வதே பாது காப்பு விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்கிறது” எனத் தொழிற்சங்கங்கள் கடுமையாகச் சாடின. முறையான பயிற்சி இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு பணிகளைச் செய்ததே இந்தத் துயரத்திற்கு மூலக்காரணம் எனத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெடித்த போராட்டமும் அரசின் நடவடிக்கையும்

விபத்தைத் தொடர்ந்து ஆலை வாயிலில் திரண்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஆவேசமாகப் போராட்ட த்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மக்களின் கொந்தளிப்பை உணர்ந்த அரசு, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், ஆலைத் தலைவர் தேவேந்திர படேல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. இறு தியில், உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா 35 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு வேலை வழங்குவதாக நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

வேலைநிறுத்த அலையில் ஏற்பட்ட மாற்றம்

சிங்கிதாராய் விபத்திற்கு முன்பு வரை, தொழிலாளர்களின் போராட்டங்கள் ஊதிய உயர்வு மற்றும் 8 மணி நேர வேலையைச் சுற்றியே இருந்தன. ஆனால், இந்த “600 டிகிரி ஆவி மழை” விபத்திற்குப் பிறகு, ‘தொழிலாளர் பாதுகாப்பு’ (Occupational Safety) என்பது போராட்டங்களின் முதன்மை முழக்கமாக மாறியுள்ளது.

•சத்தீஸ்கரின் ராய்கர், கோர்பா மற்றும் பிலாஸ்பூர் பகுதிகளில் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டங் களை நடத்தினர்.

•இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பானிபட் மற்றும் பரவுனி சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்களும், வேதாந்தா விபத்தைக் குறிப்பிட்டுத் தங்களின் பாதுகாப்பு உரிமைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மே தினமான மே 1, 2026 அன்று, தில்லி மற்றும் கொல்கத்தா பேரணிகளில் சிங்கி தாராய் பலியான தொழிலாளர்களின் படங்கள் ஏந்தப்பட்டு, புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான போர் முரசாகப் போராட்டம் உருவெடுத்தது. இந்த விபத்து, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.