அதானிக்கு எதிரான வேதாந்தா மேல்முறையீடு மனு தள்ளுபடி
1 Jun 2026, 9:21 pm

அதானிக்கு எதிரான வேதாந்தா மேல்முறையீடு மனு தள்ளுபடி

ரூ.57,000 கோடிக்கும் மேல் கடன் இருந்ததால், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (Jaypee) என்ற பெரிய உள்கட்டமைப்பு நிறுவனம் திவாலாகிப்போனது.

இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க அதானி, வேதாந்தா ஆகிய இரு நிறுவனங்களும் போட்டிப் போட்டன. வேதாந்தா நிறுவனம் ரூ.17,926 கோடி தருவதாகக் கூறியது.

ஆனால், வங்கி கள் அதை வேண்டாமென்று மறுத்து விட்டு, அதானி நிறுவனம் கேட்ட ரூ.14,535 கோடியை (வேதாந்தாவை விட ரூ.3,400 கோடி குறைவான தொகை) ஏற்றுக் கொண்டன. இதனால் வேதாந்தா நிறுவனம், “நாங்கள் அதிகப் பணம் தருகிறோம், எங்களை விட்டுவிட்டு ஏன் அதானிக்குக் கொடுக்கிறீர்கள்?” என்று தேசிய நிறுவ னச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத் தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் தலை வர் அசோக் பூஷன், தொழில்நுட்ப உறுப்பினர் பருண் மித்ரா ஆகியோர் அடங்கிய 2 பேர் கொண்ட அமர்வு, வேதாந்தாவின் அனைத்து வாதங்களை யும் நிராகரித்தது. இதுதொடர்பான தீர்ப்பில், “வேதாந்தா அதிகப் பணம் தருவதாகச் சொன்னாலும், அதை 5 வருடங்கள் கழித்து மெதுவாகத் தருவதாகக் கூறியது.

ஆனால், அதானி நிறுவனம் ரூ.6,000 கோடியை உடனடியாகக் கையில் தருவதாகவும், மீதிப் பணத்தை 2 வருடங்களிலேயே தருவதாகவும் கூறி யது. வங்கிகளுக்கு உடனடியாகப் பணம் தேவைப்பட்டதால், அதானி கூற்று சரி என்று முடிவு செய்துள்ளோம்.

வேதாந்தா வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விடுகிறோம்” என உத்தரவிட்டனர்.

இந்த இறுதித் தீர்ப்புக்கு முன்னதாக, வேதாந்தா நிறுவனம் இந்த கையகப் படுத்துதலுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

தற்போது தீர்ப்பாயமும் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், அனைத்து சட்டச் சிக்கல்களும் தீர்ந்துவிட்டன.

இனி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட், சிமெண்ட் மற்றும் உள் கட்டமைப்பு சொத்துக்களை அதிகா ரப்பூர்வமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என்பது குறிப்பிடத் தக்கது.