முந்தய பக்கம்

கேரள முதலமைச்சராகிறார் வி.டி.சதீசன்

14 May 2026, 10:27 pm
கேரள முதலமைச்சராகிறார் வி.டி.சதீசன்
<p><strong>கேரள முதலமைச்சராகிறார் வி.டி.சதீசன்</strong> </p><p>கேரள மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று 10 நாள் இழுபறிக்குப் பிறகு, ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் வி.டி.சதீசன் கேரள முதல மைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசனுக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செய லாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் களத்தில் இருந்தனர். எனினும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ் முன்ஷி, வி.டி.சதீசனை முதலமைச்சராக அறிவித்தார். கட்சித் தலைமையின் அறிவிப்பைத் தொடர்ந்து வியாழனன்று பிற்பகல் ஏ.கே.அந்தோணியின் வீட்டில் அவரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட சதீசன் பின்னர் ரமேஷ் சென்னிதலாவை சந்தித்தார். மாலை திருவனந்தபுரம் கேபிசிசி அலுவலகத்தில் யூடிஎப் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வி.டி. சதீசன் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். அதைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மே 18 கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram