கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்றார் யுடிஎப் அரசில் 20 அமைச்சர்களும் பதவியேற்பு
18 May 2026, 9:01 pm

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்றார் யுடிஎப் அரசில் 20 அமைச்சர்களும் பதவியேற்பு

திருவனந்தபுரம், மே 18 - காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவ ரான வி.டி. சதீசன், திங்களன்று கேரளத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சதீசனுடன், மூத்த காங்கிரஸ் தலை வர்களான ரமேஷ் சென்னித்தலா, கே. முரளிதரன், ஏ.பி. அனில்குமார் மற்றும் கேபிசிசி தலைவர் சன்னி ஜோசப், மூத்த ஐயுஎம்எல் தலைவர் பி.கே. குஞ்ஞா லிக்குட்டி, ஆர்எஸ்பி தலைவர் ஷிபு பேபி ஜான், கேரள காங்கிரஸ் தலைவர் மான்ஸ் ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) தலைவர் அனூப் ஜேக்கப் மற்றும் சிஎம்பி தலைவர் சி.பி. ஜான் உள்ளிட்ட 20 பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

ராகுல் காந்தி, பினராயி விஜயன் பங்கேற்பு

விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அமைப்புப் பொறுப்பாளர் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட் டோர் விழாவில் கலந்து கொண்டனர். ஜனநாயக மரபுகளையும் அரசியல் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். புதிய முத லமைச்சரின் சிறப்பு அழைப்பை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஎம் மாநிலச் செயலாளர் எம். வி.கோவிந்தன் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.