தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு

9 May 2026, 10:45 pm
குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு

குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு

சென்னை, மே 9 - தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி எந்த வகையிலும் நிறைவேறி விடக் கூடாது என்பதற்காகவே தமி ழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்பட் டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில் திமுக கூட்டணியில் எட்டு தொகுதி களில் போட்டியிட்ட விசிக, திண்டி வனம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடதுசாரி கட்சிகளுடன் பல்லாண்டு காலமாக மக்கள்நலக் கூட்டணியில் இணைந்து போராடி வரும் விசிக, இடதுசாரிகளின் முடி வோடு ஒத்துப்போகும் என்று முன்னரே தெரிவித்திருந்தது.

மே 9 (சனிக்கிழமை) அன்று விசிக வின் உயர்நிலைக் குழு கூட்டம் நடை பெற்றது. அதைத்தொடர்ந்து, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் வந்து திருமாவளவனை சந்தித்தார். அப் போது ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந் தித்த திருமாவளவன், “விஜய் ஆட்சி அமைப்பது விசிகவின் நிலைப்பாட் டால் தடைபட்டது என்ற நிலை வந்து விடக் கூடாது என்றும், அசாதாரண சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று விளக்கி னார். எந்தவித நிபந்தனையும் விதிக்கா மல், எந்தக் கோரிக்கையும் வைக்கா மல் நிபந்தனையற்ற ஆதரவு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரி வித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முன்கூட்டியே இந்த முடிவு தெரிவிக்கப் பட்டதாகவும், அவரும் “உங்களது சுதந்திரமான முடிவை வரவேற்கிறேன்” என்று கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். கூட்டணிக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பதவியேற்புக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு வரு மாறு விஜய்யிடம் வேண்டுகோள் வைத் ததாகவும் திருமாவளவன் தெரிவித் தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.