ஆதிதிராவிட மகாஜன சங்க சொத்துகளை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார் விசிக எம்எல்ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு
30 Oct 2026, 11:47 pm

ஆதிதிராவிட மகாஜன சங்க சொத்துகளை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார் விசிக எம்எல்ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சிதம்பரம், அக் 30-மறைந்த எல். இளையபெருமாளால் ஆதிதிராவிட மக்களின் சமூக வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஆதிதிராவிட மகா ஜன சங்கத்தின் சொத்துகளை, காட்டு மன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர், பட்டியல் சமூகத்தினர் மற்றும் ஆதிதிராவிட மகாஜன சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் மண்டல செயலாளர் வ.க. செல்லப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமுதாய வளர்ச்சிக்காக மறைந்த எல். இளையபெருமாள் அடித்தட்டு மக்களிடம் நிதி திரட்டியும், கிராம மக்கள் வசூலித்துக் கொடுத்த தொகைகளைப் பெற்றும் ஆதி திராவிட மகாஜன சங்கத்தின் பெயரில் சொத்துகளை வாங்கினார். அதன் ஒரு பகுதியாகவே சிதம்பரம் நகரின் முக்கியப் பகுதியான வெள்ளப்பிரமந்தான் தெருவில் 1,750 சதுர அடி நிலமும் வாங்கப்பட்டது. அவர் சங்கத்தின் தலைவராக இருந்தால் அவரது பெயரில் வாங்கப்பட்டது.

தற்போது சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜோதமணியும் அவரது அண்ணன் மனைவிகலாமணி உள்ளிட்ட குடும்ப உறுப்பி னர்களும் சங்கத்தின் சொத்துகளைத் தங்களது பெயருக்கு மாற்றி பல கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்வ தற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்தது சிதம்பரம் பத்திரபதிவு பதிவாளரிடம் நானும் ஆதிதிராவிடமகாஜன சங்கத்தை சேர்ந்தவர்களும் மனு அளித்துள்ளோம்.

சமூக மக்களின் நலனுக்காக உரு வாக்கப்பட்ட சங்கத்தின் சொத்துகளைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மாற்றவோ விற்பனை செய்யவோ அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கையை உடனடி யாக நிறுத்தாவிட்டால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பட்டியல் சமூக மக்கள் மற்றும் ஆதிதிராவிட மகாஜன சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.