தவெக அரசில் இணைந்த விசிக, ஐயுஎம்எல் வன்னியரசு, ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு!
22 May 2026, 8:29 pm

தவெக அரசில் இணைந்த விசிக, ஐயுஎம்எல் வன்னியரசு, ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு!

சென்னை, மே 22 - விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி யரசு, ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் புதிய அமைச்சர் களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கிண்டி மக்கள் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் அர்லேகர் பதவிப்பிர மாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், மே 10 அன்று தமிழகத்தின் முதலமைச்ச ராகப் பதவியேற்றார். அவருடன் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன் பிரபு, கீர்த்தனா வெங்கட்ர மணன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், தவெக அமைச்சரவை வியாழக்கிழமையன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், என். மரிய வில்சன், வினோத், டி. லோகேஷ் தமிழ் செல்வன், ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், வி.சம்பத்குமார், கே. விக்னேஷ், எஸ். கமலி, சி. விஜயலட்சுமி உள்ளிட்ட மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அப்போதே தவெக-வுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். ராஜேஷ் குமார் (சுற்றுலாத்துறை), பி. விஸ்வநாதன் (உயர் கல்வித்துறை) ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தவெக அழைப்பை ஏற்று, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் விரைவில் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ச.ஜோசப் விஜய் தலைமை யிலான அமைச்சரவை, வெள்ளிக்கிழ மையன்று 2-ஆவது முறையாக விரி வாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்கள் மாளிகையில், காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐயுஎம் எல் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகா னும், விசிக சார்பில் திண்டிவனம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அர சும் புதிய அமைச்சர்களாகப் பதவி யேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளு நர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பதவியேற்ற ஷாஜகான் “இறைவன் மீது ஆணையாக” என்றும், அடுத்து பதவியேற்ற வன்னி அரசு “உளமாற” என்றும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அமைச்சர்கள், ஐயுஎம்எல் தலை வர் காதர் மொகிதீன், விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்விலும் வந்தே மாதரம், தேசிய கீதம் என்ற வரிசை க்குப் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம் பெற்றது.

சமூகநீதித்துறை என பெயர் மாற்றம்!

பதவியேற்பை அடுத்து இரண்டு புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மக்கள் மாளிகையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், அமைச்சர் ஷாஜ கானுக்குச் சிறுபான்மையினர் நலத்துறை யும், அமைச்சர் வன்னி அரசுக்கு ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடி யினர் நலத்துறையும் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் “சமூக நீதித்துறை” என மாற்றப்பட்டு வன்னி அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!

தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்மான ச. ஜோசப் விஜய்யை விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப் போது கட்சியின் நிர்வாகிகள் து. ரவிக் குமார் எம்பி, முன்னாள் எம்எல்ஏ எம்.சிந் தனை செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க. ஸ்டாலின், பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் வாழ்த்து!

அமைச்சர்களாக பதவியேற்றுள்ள வன்னி அரசு, ஷாஜகான் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். “இன்று அமைச்சர்களாக பொறுப்பேற் றுள்ள தோழர் வன்னியரசு, திரு. ஷாஜ கான் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வாழ்த்து தெரிவித்துள்ளார்.