அரக்கோணத்தில் விசிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
10 Apr 2026, 5:30 am

அரக்கோணத்தில் விசிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ராணிப்பேட்டை, ஏப்.9- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) வேட்பாளராகப் போட்டியிடும் வழக்கறிஞர் எழில் கரோலின் அறிமுகப்படுத்தும் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கினார். முன்னதாக, தேர்தல் பணிமனையை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் வேட்பாளர் எழில் கரோலினை கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடமும் அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் ஆர். காந்தி உரையாற்றினார்.

"மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் மாபெரும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். தோழமைக் கட்சி களின் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'பானை' சின்னத்திற்குத் தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதில் சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என். காசிராஜன், அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர் ஏபிஎம். சீனிவாசன், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் சுரேஷ் குமார், விசிக மாவட்டச் செய லாளர் சந்தோஷ், கேஎம்டிகே மாவட்டச் செய லாளர் மனோகர், மதிமுக மாவட்டச் செய லாளர் பி.என். உதயகுமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.