விசிக சார்பில் பால பிரஜாபதி அடிகளார், மு. வீரபாண்டியனுக்கு விருதுகள்! தொல். திருமாவளவன் எம்.பி. வழங்கினார்
6 Jul 2026, 9:05 pm

விசிக சார்பில் பால பிரஜாபதி அடிகளார், மு. வீரபாண்டியனுக்கு விருதுகள்! தொல். திருமாவளவன் எம்.பி. வழங்கினார்

சென்னை, ஜூலை 6 - ‘விடுதலை சிறுத்தைகள் விருது கள்-2026’ வழங்கும் விழா ஞாயிறன்று (ஜூலை 5) சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது

இந்நிகழ்வில் முனைவர் கு. சொக்க லிங்கத்திற்கு ‘அம்பேத்கர் சுடர்’ விரு தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு. வீர பாண்டியனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருதையும், வழக்கறிஞர் ஹென்றி திபேனுக்கு ‘பெரியார் ஒளி’ விருதை யும், பாலபிரஜாபதி அடிகளாருக்கு ‘காமராசர் கதிர்’ விருதையும், சமூக செயற்பாட்டாளர் ரூத் மனோரமா வுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விரு தையும், ஐஎன்டிஜெ துணைத் தலை வர் முகமது முனீருக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருதையும், தமிழறி ஞர் பொ. வேல்சாமிக்கு ‘செம்மொழி ஞாயிறு’ விருதையும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வழங்கினார்

உறுதியான தோழமை

இதனை தொடர்ந்து பேசிய அவர், “இடதுசாரிகளுடன் தோழமையை உறுதிப்படுத்தி வருகிறேன். தலித் இயக்கம் ஒன்று அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதற்கு பெரியார் இயக்கத்தின் வழி வந்தவர்கள் பாராட்டி இருக்க வேண்டும். விசிக-விலிருந்து ஒருவரை அழைத்துச் சேர்த்துக் கொண்டதன் மூலம் தங்க ளது கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமை அறிவித்து விட்டது. தவெக ஆட்சி தொடர உற்ற துணை நிற்போம். தவெக கூட்டணி குறித்து ஜூலை 1 அன்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதில் விசிக பங்கேற்கும்” என்றார்.

சோபாவுக்கு இடமில்லை

சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், “தவெக-வை ஆதரிக்காவிடில் ஜன நாயக சக்திக்கான வாய்ப்பை பறித்து விட்டார்கள் என்றும், அந்தச் சூழலை பயன்படுத்தி ஆளுநர் அமர்ந்து விட்டால் நமக்கு தீராத வரலாற்று பழி ஏற்படும் என்றும், மக்கள் முன் மொழிந்ததை இடதுசாரிகள் வழி மொழிந்தோம். இதில் ஏதும் நிபந்த னை இல்லை. மக்களின் விடுதலைக் காக போராடுகிறவர்கள் அருகில் சோபா, கல்லாப்பெட்டி வந்ததாக வர லாறு இல்லை. அதிமுக, திமுக இணை வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆளுநர் காலதாமதம் செய்து காய் நகர்த்தி அவர் அமர்ந்துவிடக் கூடாது என்பதால் தவெக-வை ஆதரித்தோம்” என்றார். இந்நிகழ்வில் விசிக பொதுச் செயலாளர்கள் து. ரவிக்குமார் எம்.பி., மு. சிந்தனைச்செல்வன், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, பொரு ளாளர் எஸ். எஸ்.பாலாஜி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.