தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மு.வீரபாண்டியனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

3 Jun 2026, 12:43 am
மு.வீரபாண்டியனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  அறிவிப்பு
<p><strong>மு.வீரபாண்டியனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு</strong></p><p>சென்னை, மே 2 - இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டி யனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான விசிக-விருது பெறுவோர் பட்டியலை தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ளார். அதில், ‘அம்பேத்கர் சுடர்’ விருது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.சொக்கலிங்கத்திற்கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது சமூக செயற் பாட்டாளர்ரூத் மனோர மாவுக்கும் வழங்கப்படும். ‘காமராசர் கதிர்’ விருது ‘பாலபிரஜாபதி அடிகளாருக்கும், ‘பெரியார் ஒளி’ விருது ஹென்றி டிஃபேனுக்கும், ‘மார்க்ஸ் மாமணி’ விருது மு. வீரபாண்டியனுக்கும், ‘காயிதேமில்லத் பிறை’ விருது முகமது முனீருக்கும், ‘செம்மொழி ஞாயிறு’ விருது தமிழறிஞர் பொ.வேல்சாமிக்கும் வழங்கப்படும். இந்த விருது வழங்கும் விழா ஜூலை 5 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.