விடுதலை சிறுத்தைகள் விருதுகள்–2026 வழங்கும் விழா
5 Jul 2026, 11:46 pm
<p><strong>விடுதலை சிறுத்தைகள் விருதுகள்–2026 வழங்கும் விழா</strong></p><p>விடுதலை சிறுத்தைகள் விருதுகள்–2026 வழங்கும் விழா ஞாயிறன்று (ஜூலை 5) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் கு.சொக்கலிங்கத்திற்கு அம்பேத்கர் சுடர் விருதையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்கு மார்க்ஸ் மாமணி விருதையும், வழக்கறிஞர் ஹென்றி திபேனுக்கு பெரியார் ஒளி விருதையும், அய்யா பாலபிரஜாபதி அடிகளாருக்கு காமராசர் கதிர் விருதையும், சமூக செயற்பாட்டாளர் ரூத் மனோரமாவுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதையும், ஐஎன்டிஜெ துணைத் தலைவர் முகமது முனீருக்கு காயிதேமில்லத் பிறை விருதையும், தமிழறிஞர் பொ.வேல்சாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதையும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வழங்கினார். உடன் விசிக பொதுச்செயலாளர்கள் து. ரவிக்குமார் எம்பி, சிந்தனச்செல்வன், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
