விதொச வாழப்பாடி தாலுகா மாநாடு
13 Jul 2026, 10:34 pm
<p><strong>விதொச வாழப்பாடி தாலுகா மாநாடு</strong></p><p>சேலம், ஜூலை 13- விவசாயத் தொழிலா ளர் சங்க வாழப்பாடி தாலுகா மாநாட்டில் நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. தாலுகா தலைவர் பழனிமுத்து தலைமையில் நடை ெபற்ற இந்த மாநாட்டில், சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.கே.சேகர், மாவட்டத் தலைவர் ஜி . கணபதி, மாநிலக் குழு உறுப்பினர் வி.தங்க வேலு, சிபிஎம், தாலுகா செயலாளர் ஜி.பூபதி மற்றும் கே.கந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னார்கள். இதில், 100 நாள் வேலையை பாதுகாக்க வேண்டும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். வாழப்பாடியில் நடைபெறும் மேம்பாலப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவராக கே. ராஜா, செயலாளராக கே.கணேசன், பொரு ளாளராக டி.தினகரன் உட்பட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.</p>
