தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இழுபறியில் வாவிபாளையம் புதிய துணை மின் நிலையம்! நில மதிப்புக் கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் குறைக்குமா?

4 Jul 2026, 12:45 am
இழுபறியில் வாவிபாளையம் புதிய துணை மின் நிலையம்! நில மதிப்புக் கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் குறைக்குமா?

இழுபறியில் வாவிபாளையம் புதிய துணை மின் நிலையம்! நில மதிப்புக் கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் குறைக்குமா?

திருப்பூர், ஜூலை 3– நெருப்பெரிச்சல் அருகே வாவி பாளையத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் ஓராண்டுக்கும் மேலாக இழுபறி யில் உள்ளது. பொதுமக்களின் அத் தியாவசிய தேவையை உணர்ந்து, இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, நெருப் பெரிச்சல் முன்பு ஊராட்சியாக இருந்தபோது 7 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே இருந்தன. மாநகராட்சி விரிவாக்கத்திற்குப் பின், வாவிபாளையம் சுற்றுவட் டார பகுதிகளில் குடியிருப்புக ளும், பனியன் தொழிற்சாலைக ளும் அசுர வேகத்தில் அதிகரித்துள் ளன.

தற்போது இங்குள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின் கீழ் தொ.மண்ணரை, பாரப்பாளை யம், நல்லாத்துப்பாளையம், தோட் டத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.

இப்பகுதிகளுக்கு பெருமாநல் லூர், வேலம்பாளையம், திருப்பூர், முதலிபாளையம், செங்கப்பள்ளி, குமார் நகர் ஆகிய 6 துணை மின் நிலையங்களில் இருந்தே மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடுமையான குறைவ ழுத்த மின்பிரச்சனை ஏற்படுகிறது. காலையில் வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங் களை இயக்க முடிவதில்லை.

பனி யன் நிறுவனங்களில் தையல் இயந் திரங்கள் பழுதாகி உற்பத்தி பாதிக் கப்படுகிறது. மேலும், 6 வெவ்வேறு துணை மின் நிலையங்களின் கீழ் இப்பகுதி கள் வருவதால், தனித்தனி நாட்க ளில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடக்கிறது.

இதனால் மற்ற பகுதி களுக்கு மாதம் ஒரு நாள் மின்தடை என்றால், இங்கு மாதத்தில் 3 நாட் கள் வரை மின்தடை ஏற்படுகி றது. இதனால் தொழிற்சாலை களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் அவலநிலை தொடர்கிறது.

இங்கு தனி துணை மின் நிலையம் அமைக் கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொதுமக்களும் தொடர்ந்து போராடி வந்தனர். இத னையடுத்து, வாவிபாளையம் கணக்கம்பாளையம் சாலையில் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் 1.33 ஏக்கர் நிலத்தை துணை மின் நிலையம் அமைக்க கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய் தார். ஆனால், அதே இடத்தில் திடக் கழிவு மேலாண்மைப் பூங்கா அமைக்க மாநகராட்சிக்கு 5.4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதில் வேதனை என்னவென்றால், மாநக ராட்சிக்கு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் என நில மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மின்வாரியத்தின் 1.33 ஏக்கர் நிலத்திற்கு மட்டும் ரூ.4 கோடியே 8 லட்சத்து 72 ஆயிரத்து 150 செலுத்த வேண்டும் என மிக அதிகமாகவும், பாரபட்சமாகவும் க ட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் சுமையில் உள்ள மின் வாரியத்தால் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாததால் திட்டம் முடங்கியுள் ளது.

இதற்கிடையே, மின்வாரியத் திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் குப்பை மேலாண்மைப் பூங்கா விற்கு எழுதிக் கேட்க மாநகராட்சி முயல்வதாக கூறப்படுகிறது. இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்க னவே உள்ள குப்பை பூங்காவால் சுகாதார சீர்கேடு நிலவும் சூழலில், மின்சாரத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என மக்கள் வலியு றுத்துகின்றனர்.

எனவே, வடக்கு பகுதியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நில மதிப்புக் கட்டணத்தை குறைத்து வாவி பாளையம் துணை மின் நிலையத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் உட னடியாக செயல்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட் டம் நடத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.