முந்தய பக்கம்

தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு தினம் மதுக்கூரில் சிபிஎம் வீரவணக்க அஞ்சலி

6 May 2026, 11:13 pm
தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு தினம் மதுக்கூரில் சிபிஎம் வீரவணக்க அஞ்சலி
<p><strong>தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு தினம் மதுக்கூரில் சிபிஎம் வீரவணக்க அஞ்சலி</strong></p><p>​​​​​​​​தஞ்சாவூர், மே 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம் சார்பில் தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப் பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வையொட்டி, வாட்டாக்குடி இரணியன் நினைவிடத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தி னர். அவரது வீரஞ்செறிந்த போராட்ட வர லாற்றை நினைவு கூர்ந்து தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாட்டாக்குடி இர ணியன் நகரில் அமைந்துள்ள இரணியன் ஸ்தூபி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செங்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிபிஎம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினர் கள் ஏ.எம்.வேதாச்சலம், எம்.அய்யநாதன், எல். முருகவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram