முந்தய பக்கம்

வத்தலக்குண்டுவில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு

24 May 2026, 11:07 pm
வத்தலக்குண்டுவில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு
<p><strong>வத்தலக்குண்டுவில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு</strong></p><p>​ சின்னாளப்பட்டி, ஏப்.24- வத்தலக்குண்டுவில் பள்ளி வக னங்களை திண்டுக்கல் வட்டார போக்கு வரத்து அலுவலர் ஆய்வு செய்தார். வத்தலக்குண்டு வட்டாரப் போக்கு வரத்து அலுவலக மைதானத்தில் ​ கொடைக் கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள், வேன்கள் உள்பட 95 வாக னங்கள் மைதானத்திற்கு கொண்டு வரப் பட்டது. வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலு வலர் கண்ணன் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலு வலர் ஜான் பிரிட்டோ, நிலக்கோட்டை துணை வட்டாட்சியர் அபிராமி, வத்த லக்குண்டு தீயணைப்பு துறை அலுவலர் முத்துச்செல்வம், வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் கௌதமன் ஆகி யோர் கலந்து கொண்டனர். 95 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் குறைபாடுகள் கண்டறி யப்பட்ட 10 வாகனங்களின் உரிமையா ளர்களுக்கு, அவற்றை உடனடியாக சரி செய்து மறுஆய்வுக்குக் கொண்டு வரு மாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆய்வின் போது திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோட்டார் வாகன ஆய்வாளர், மாவட்ட கல்வி அலுவ லர், துணை வட்டாட்சியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram