ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am

ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

கள்ளக்குறிச்சி, ஏப். 7: ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அரும்பாடி, எல்வம்பாடி, பிரிவிடைப்பாளையம், முனிவாழை, பழங்கூர், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.