வசந்தம் கார்த்திகேயன் பிரச்சாரம் துவக்கம்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>வசந்தம் கார்த்திகேயன் பிரச்சாரம் துவக்கம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம், சித்தப்பட்டினம், தேவரடியார்குப்பம், கீழத்தாழனூர், செட்டித்தாங்கள், பொருவளூர் ஆகிய ஊராட்சிகளில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.</p>
