தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வருசநாடு மலைக்கிராம மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

28 Sept 2026, 9:04 pm
வருசநாடு மலைக்கிராம மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

வருசநாடு மலைக்கிராம மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்

கடமலைக்குண்டு, செப்.28-தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு மற்றும் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் 98 மலைக்கிராம மக்களை, ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வனப் பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, கடமலைக்குண்டு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தின் 3-ஆம் நாளான திங்களன்று, கடந்த 2 நாட்களைக் காட்டிலும் கடமலை–மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்துக்குஆதரவு தெரிவித்து, கடமலைக்குண்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் உள் ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் பேரணியாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி தங்களை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் இரவு, பகலாக அங்கேயே தங்கி போராட்டத் தைத் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், கடுமையான வெயில் மற்றும் அதிகளவிலான கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் 4 முதியவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் போராட்டக் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கமடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மேகமலை புலிகள் காப்பகம் தொடர்பான வழக்கு செவ்வாயன்று (29 ஆம் தேதி) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக் கின் முடிவைப் பொறுத்தே தங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.