வருசநாடு வன விவசாயிகளை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு உத்தரவை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் குறைதீர் கூட்டத்தில் தேனி ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
19 Jun 2026, 9:58 pm

வருசநாடு வன விவசாயிகளை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு உத்தரவை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் குறைதீர் கூட்டத்தில் தேனி ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தேனி ,ஜூன் 19- வருசநாடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விவசாயம் செய்து வரும் வன விவசாயிகளை , துணை ராணுவம் உதவியுடன் வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்,2006 வன உரி மை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் தேனி மாவட்ட ஆட்சி யரிடம் வலியுறுத்தியுள்ளது

. தேனி மா

வட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்,மாவட்ட ஆட்சி யர் வைத்திநாதன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது .மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ குமார்,உதவி வனப்பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி, வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) நர்மதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திரை இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட வருசநாடு வன விவசாயி கள் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் தலைமையில் மனு அளிக்க வந்தனர் .சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் ,மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வெங்கடேசன் , ஜி.எம். நாகராஜன் , கே.எஸ்.ஆறுமுகம் ,க. மயிலாடும்பாறை ஒன்றிய செய லாளர் ஆர்.போஸ் உள்ளிட்ட வருச நாடு கிராம தலைவர்கள் தேனி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: வருசநாடு மலை கிராமப் பகுதிகளில் உள்ள 9 ஊராட்சிக ளில் வன விவசாயிகள் 5 ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோர் 4 தலைமுறை யாக வசித்து விவசாயம் செய்து வருகிறார்கள் .அரசு அலுவலகம், பள்ளிகள் , அங்கன்வாடி ,நியாய விலைக்கடைகள் இயங்கி வருகி றது.

வன உரிமை சட்டம் 2006-இன் படி வன நிலங்களில் விவசாயம் செய்தும் ,குடியிருந்து வருபவர்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மக்கள் மன்றத்திலும் ,நீதிமன்றத்தி லும் தொடர்ந்து போராடி வரு கிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி ,உச்சநீதிமன்றம் வன உரிமை சட்டம் 2006 -ஐ கணக்கில் கொள்ளாமல் ,1980 ஆண்டு வனச் சட்டப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் -மேக மலை புலிகள் காப்பக பகுதி களில் தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை ,வருசநாடு ,தும்மக் குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் வசித்து ,விவசா யம் செய்து வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை துணை ராணுவப் படை உதவியுடன், மத்திய அங்கீகாரம் பெற்ற குழு முன்னிலையில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உ

த்த ரவு ஏற்புடையது அல்ல.அங்கு வசித்து விவசாயம் செய்து வருப வர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல.அவர்கள் 4 தலைமுறைக ளாக குடியிருந்து விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள் .வன நிலத்தை ஆக்கிரமித்து விவ சாயம் செய்யவில்லை .

வன உரி மை சட்டம் 2006 -இன் அடிப்படை யில் பட்டா வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற உத்த ரவை நிறுத்தி வைக்கும் வகை யில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள் ளது.அவர் மூலம் முதல்வர் கவ னத்திற்கு எடுத்துச் செல்வேன் .அர சுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்படும் .ம

க்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். வன விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் வந்ததால் ,காவல் துறையினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு 10 பேருக்கு மட்டுமே அனுமதி என சொல்லி தடுத்து நிறுத்தினர் .

அதனைத் தொடர்ந்து டி.கண்ணன் தலை மையில் அலுவலக கேட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர் .பின்னர் விவசாயிகளை அனு மதித்தனர் . குறைதீர் கூட்டத்தில் பேசிய பெண் விவசாயி ,குன்னூர் கிராமம் ,அடைக்கம்பட்டியில் உள்ள கல்குவாரியில் அளவுக்கு மீறி கற்கள் உடைக்கப்படுவதால் ,விவ சாயம் பாதிக்கப்படுகிறது .

நிலங்க ளில் தூசி படிக்கிறது .கன ரக வாகனம் செல்வதால் சாலைகள் மோசமடைவதாக குறிப்பிட்டார் .ஏற்றுமதி தரம் வாய்ந்த மா கன்று களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.