தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமர் தொகுதியில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

19 Aug 2026, 8:23 pm
பிரதமர் தொகுதியில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

பிரதமர் தொகுதியில் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, மருத்துவப் பலன்கள் மற்றும் முறையான விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி சாலையில் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூகவியலில் பட்டம் பெற்ற சன்னி குமார் ராவத் படித்த கிழவிக்கு வேலை இல்லாததால் இப்பணியில் உள்ளார்.அவர் கூறுகையில் மாதத்திற்கு ரூ.10,700 மட்டுமே ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. அதிலும் தனியார் நிறுவனம் பணத்தை பிடித்துக்கொண்டு ரூ.8,000 -9,000 மட்டுமே தருகிறது எனதெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும்குழந்தைகளின் கல்விச் செலவுக்கே இத்தொகை புதியதாக இல்லாத நிலையில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் மிகக்கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

சம்பளத்தில் இஎஸ்ஐ-க்கான தொகைப் பிடிக்கப்பட்டாலும், அதற்கான அடையாள அட்டை (Card) வழங்கப்படாததால், மருத்துவமனைகளில் அதைப் பயன்படுத்த முடிவதில்லை எனதொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தினமும் இருமுறை ஆன்லைனில் புகைப்படத்துடன் வருகைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.ஏதேனும் அவசரநிலையால் புகைப்படத்தைப் பதிவேற்றத் தவறினால், அன்றைய நாள் முழுவதும் ‘வராதவராக’ சொல்லி ஊதியம் பிடிக்கப்படுகிறது.

மாதம் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ விடுமுறை இருந்தாலும், விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படுகிறது.மேற்பார்வையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.இந்நிலையில் தான் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தை கண்டு இறங்கி வந்த மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படியுடன் சேர்த்து மாதம் ரூ.13,006 வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் விலை வாசி உயர்வை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் 18,000 ரூபாய் மாத ஊதியமாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.