உள்ளாட்சிகளுக்கு 20 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் வரதராஜபுரம் கிராம சபை கூட்டத்தில்
2 Nov 2026, 12:13 am
<p><strong>உள்ளாட்சிகளுக்கு 20 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் வரதராஜபுரம் கிராம சபை கூட்டத்தில் </strong>தீர்மானம்சென்னை, நவ.1-காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1(ஞாயிறு) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாநில அரசு தனது சொந்த வரிவருவாயில் உள்ளாட்சிகளுக்கு வழங்கும் பங்கை 10 விழுக்காட்டிலிருந்து 20 ஆக உயர்த்த வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.</p><p>வரதராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களும், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரதராஜபுரம் நல மன்ற கூட்டமைப்பின் தலைவர் வெ.ராஜசேகரன் 2 தீர்மானங்களை முன்மொழிந்தார்.ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்போன்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், நிதியில்லை என்ற காரணத்தால் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஆறாவதுமாநில நிதி ஆணையத்தின் அடிப்படையில், மாநில அரசு தனது சொந்த வரி வருவாயில் உள்ளாட்சிகளுக்கு வழங்கி வரும் 10சதவீத பங்கை 20 சதவீதமாக உயர்த்தி வழங்கவேண்டும்; அதில் ஊரகஉள்ளாட்சிகளுக்கு 10.2 சதவீதத்தை வழங்க வேண்டும், தவெக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஆற்றில் நேரடியாகக் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுடன், ஆற்றின் கரைகளில் நடைபாதை அமைத்தல், பூங்காக்கள் உருவாக்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனக்கோரிமற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.</p><p>இந்த தீர்மானங்களை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பின் தலைவர் வெ.ராஜசேகரன் மற்றும் பொதுச் செயலாளர் டி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>
