முந்தய பக்கம்

கிராம நிர்வாக அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது விருத்தாசலத்தில் அவலம்

28 Oct 2026, 11:16 pm
கிராம நிர்வாக அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது விருத்தாசலத்தில் அவலம்

கிராம நிர்வாக அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது விருத்தாசலத்தில் அவலம்

கடலூர்,அக்.28-கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே அம்மேரி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி செவ்வாயன்று மாலை பெயர்ந்து விழுந்தது.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக அம்மேரி கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது.

தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ராஜதுரை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் பழமையான அரசு அலுவலகக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட

வற்றின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram