தீக்கதிர் முக்கிய செய்திகள்
22 May 2026, 9:44 pm

‘எங்கள் கனவு நனவாகியுள்ளது’ திருமாவளவன் பேட்டி

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, ‘சமூக நீதித்துறை’ அமைச்சராகப் பதவியேற்றதையடுத்து, சென்னை தலை மைச் செயலகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முன்னிலையில் அமைச்சர் வன்னி அரசு அலுவல் பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், விசிக பொதுச் செயலா ளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் வன்னி அரசை அமைச்சர் இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து தொல். திருமாவளவன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். பொறுப்பேற்பு விழாவில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என்று எதுவும் இல்லை. கடந்த காலங்களில் மக்களுக்காக களத்தில் போராட் டங்கள் நடத்தி வந்த எனக்கு அதிகாரத்தில் இருந்து மக்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும், நீங்கள் அதை பார்க்கப் போகிறீர்கள்” என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதி காரத்தில் பங்கு பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ கத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்று தொடர்ந்து பத்து ஆண்டுகள் பேசி வந்தோம். அது நிறைவேறியுள்ளது. விளிம்பு நிலையைச் சார்ந்தவர்கள் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் ஆட்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கனவு இன்று நனவாகியுள்ளது” என்றார்.

முதல்வரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம்?

சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நிர்வாகப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. இதன்படி பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும் தவெக- விற்கு தேர்தல் வியூகங்களை வகுத்து அளித்தவருமான ஜான் ஆரோக்கியசாமி, முதலமைச்சரின் அரசியல் ஆலோ சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், முதலமைச்சரின் கல்லூரிக் காலம் முதல் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டி, பொது நிகழ்வுகள் மற்றும் இதர விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், முதலமைச் சரின் அன்றாட நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங் களுக்கு புதிய எஸ்பி.க்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சிக்கு டோங்ரே பிரவின் உமேஷ், தென்காசிக்கு எஸ்.அசோக்குமார், திருப்பத்தூருக்கு அக்ஷய் அனில் வாஹ்ரே, பெரம்பலூ ருக்கு லலித்குமார் ஆகி யோர் மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்.பி. யாக சியாமளா தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், சென்னை போக்கு வரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.