தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்”

29 May 2026, 8:08 pm
“வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின்  ஒரு பகுதியாகும்”

“வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்”

கேரளத்தின் 16ஆவது சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் உரையுடன் வெள்ளியன்று தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில் வந்தே மாத ரம் பாடலின் தொடக்கப் பத்திகளை மட்டும் இசைக்குழுவினர் இசையாக இசைத்தனர், பாடவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் கூப்பாடு போட்டனர்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து மக்கள் மாளிகைக்கு வந்த பிறகு வந்தே மாதரம் பாடல் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் அர்லேகர், “ஆளுநர் அவையில் இருக்கும் போதெல்லாம் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும்.

ஆனால், அந்த பாடல் பாடப்படவில்லை.

வெறும் இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டது.

இதுதொடர் பாக சபாநாயகர் திருவனூர் ராதா கிருஷ்ணனிடம் பேசினேன். இப்பிரச்ச னைக்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறேன்.

நிலைமை இனி எவ்வாறு மாறுகிறது என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்” என மிரட்டல் விடும் நோக்கத்தில் பேசினார்

. பினராயி விஜயன் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் செய்தி யாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ஆளுநர் உரையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் எது வும் இடம்பெறவில்லை

. மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கேரளம் கோரிப் பெற வேண்டிய பல உரிமைகள் உள்ளன.

அவை குறித்து மாநில அரசு மவுனம் சாதித்துள்ளது.

மாநிலத்துக்கானஒன்றிய அரசின் நிதிசார் அணுகுமுறை குறித்தும் ஆளுநர் உரையில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.

நீலப் பொருளாதார திட்டம் இங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.

மாநிலக் கருவூலம் ஒப்படைக்கப்பட்டபோது அதில் ரூ.5,429 கோடி உபரித் தொகை கையிருப்பில் இருந்தது.

வந்தே மாதரம் பாடலை முழுமை யாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை என்பது முன்பே தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடி னால் போதும். அவ்வாறு பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டிய கட்டா யம் கூட இல்லை.

வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகு தியாகும்.

பதவியேற்பு விழாவின்போது அப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அது நடந்திருக்கக்கூடாது. அந்த அனு பவத்துக்குப் பிறகு மாநில அரசு ஒரு கடுமையான முடிவை எடுத்திருப்ப தாகத் தெரிகிறது. அதுவே இந்த விவ காரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சரி யான நிலைப்பாடு” என தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.