தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வந்தே மாதரம் கட்டாயமா? “தேசியப் பாடலைச்” சுற்றியுள்ள அரசியலும் உண்மைகளும் - களப்பிரன்

24 Sept 2026, 9:02 pm
வந்தே மாதரம் கட்டாயமா?  “தேசியப் பாடலைச்” சுற்றியுள்ள அரசியலும் உண்மைகளும் - களப்பிரன்

வந்தே மாதரம் கட்டாயமா? “தேசியப் பாடலைச்” சுற்றியுள்ள அரசியலும் உண்மைகளும் - களப்பிரன்

“தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் திருத்தம், 2026” தொடர்பான உச்சநீதிமன்றம் செப்டம்பர் 21 அன்றுமிக முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது. வந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பவர்களைத் தண்டித்துகுற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஜிஅடங்கிய அமர்வு, இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. “தேசியப் பாடல் எது என்பதில் எந்தத் சர்ச்சையும் இல்லை; ஆனால், யாரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ்வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தை மீற முடியாது. ஒருவர் தனது மனச்சாட்சியின்படி தேசியப்பாடலின் ஒன்று அல்லது அனைத்துச் சரணங்களையும் பாடலாம்; பாட மறுத்தால் அவரைத் தண்டனைக்குள்ளாக்க முடியாது” என்று நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், வந்தே மாதரம் பாடலின் பின்னணியும் தற்போதைய அரசியல்நகர்வுகளும் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ‘தேசிய கௌரவஅவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971’-இல் திருத்தம் செய்துபுதிய சட்டத்தை 2026 ஜூலை இறுதியில் அவசரஅவசரமாக ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் “வந்தே மாதரம்” பாடலைப் பாடவிடாமல் தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைமற்றும் அபராதம் விதிக்கப்படும் என இச்சட்டம் கூறுகிறது. இதன் மூலம் பிரதமர் மோடி அவர்களும், அவரதுஅரசும் தேசியப் பாடலுக்குக் கௌரவம் தரப் போராடுவது போலவும், எதிர்க்கட்சிகள் அதைத் தடுப்பது போலவும்ஒரு போலி தேசப்பற்று அரசியல் கட்டமைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு,விலைவாசி உயர்வு, வேலையின்மை, நாடு முழுக்க நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் என மிகமுக்கியமான விவாதப் பொருட்கள் இருக்கையில், இச்சட்டத்தை அவசரஅவசரமாக நிறைவேற்றியதன் பின்னணி திசைதிருப்பும் அரசியலே ஆகும். மக்களின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

“வந்தே மாதரம்” வந்த கதை

1857 சிப்பாய் புரட்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியாவைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. பிரிட்டன் மகாராணியால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆவார். இவர் 1891-ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் அரசு அதிகாரியாகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசிற்குச் சேவை செய்ததற்காக இவருக்கு‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் 1870-இல் “God Save the Queen” பாடலைக்கட்டாயமாக்கிய நிலையில், பங்கிம் சந்திரர் வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் 1876-இல் எழுதிய பாடல்தான்“வந்தே மாதரம்” ஆகும். இப்பாடல் 1882-இல் வெளிவந்த “ஆனந்தமடம்” நாவலில் முதன்முதலில் அச்சிற்கு வந்தது.

ஜாதுநாத் பட்டாச்சார்யா தொடங்கி இரவீந்திரநாத் தாகூர் வரை பலர் இப்பாடலுக்குப் பல்வேறு காலக்

கட்டங்களில் இசையமைத்துள்ளார்கள். இதில் வரும் 7 கோடி மக்கள் என்பது அன்றைய வங்கமாகாணத்தின் (இன்றைய வங்க தேசம், மேற்குவங்கம், ஒடிசா, பீகார்) மொத்த மக்கள் தொகையாகும். அரவிந்த கோஷ் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது ‘வங்கத்தின் தேசிய கீதம்’ என்றுசொன்னாரே தவிர, ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பிற்குமானது என்று யாரும் கூறவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வங்கப் பிரிவினையை எதிர்த்து எழுந்தபோராட்டங்களில்தான் இப்பாடல்முக்கியத்துவம் பெற்றது. அன்றைய காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடியவர்கள் இப்பாடலைப் பயன்படுத்திய போதிலும், இதன் மத மற்றும் பிராந்திய வரையறைகள் காலப்போக்கில் தீவிர விவாதத்திற்குள்ளாகின.

தேசிய அரசியலில் வந்தே மாதரமும் முழக்கமும்

1905-ஆம் ஆண்டில் வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து, வங்க மக்களும் விடுதலைப் போராட்ட வீரர்களும் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்கள். அதைக் கண்ட காங்கிரஸ் தலைவர்களான திலகர், வ.உ.சி போன்றோர் இப்பாடலைத் தங்களதுமாநிலங்களுக்குக் கொண்டு சென்றனர். வ.உ.சி-யுடன் இருந்த வங்க மொழி அறிந்த பாரதி இப்பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஆயினும், முழுப் பாடலை விட “வந்தே மாதரம்” என்னும் முழக்கமே மக்கள்மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்தது.

இதற்கிடையில் லாகூர் பல்கலைக்கழக விரிவுரையாளர் முகமது இக்பால் 1904-இல் எழுதிய “சாரே ஜகான் சே அச்சா” உருதுப் பாடலும், 1911 டிசம்பர் 27-இல்கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட மகாகவி தாகூரின் “ஜனகனமன” பாடலும் தேசிய அரசியலில்முக்கியத்துவம் பெற்றன. மகாத்மா காந்தி எரவாடா சிறையில் 1932-இல் நூறு முறைகளுக்கு மேல் இப்பாடலைப் பாடியுள்ளார். பண்டித நேருவும், நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இப்பாடலைமிகவும் விரும்பினார்கள். இக்பால் 1938-இல் காலமானார்; ஆனாலும் அவர் எழுதிய பாடல் மத நல்லிணக்கத்தின் குறியீடாக விளங்கியது.

1937-ஆம் ஆண்டில் பைசாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து

தீவிர விவாதம் எழுந்தது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல் சீக்கிய, சமண, கிறித்தவ, புத்த அமைப்புகளும் இப்பாடலுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை போன்ற அமைப்புகள் மட்டுமே முழுப் பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வாதிட்டன. காந்தியடிகள், நேரு, அபுல் கலாம் ஆசாத் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் அடங்கிய குழு எந்தவொரு மத ரீதியிலான பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணங்களை மட்டுமே கொண்ட வந்தே மாதரம் பாடலை ஏற்றது.1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியக் கொடி ஏற்றப்பட்ட நள்ளிரவில் கசேதா கிருபாளினி “சாரே ஜகான் சே அச்சா” மற்றும் “ஜனகனமன” பாடல்களைப் பாடினார். தொடர்ந்து “வந்தே மாதரம்” (மதச்சார்பற்ற முதல் இரண்டு பத்திகள் தேசியப் பாடலாக), “ஜனகனமன” தேசிய கீதமாக மற்றும் “சாரே ஜகான் சேஅச்சா” ராணுவ அணிவகுப்புப் பாடலாக ஆகியவை அரசியல் நிர்ணய சபையால் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டன. இத்தகைய சமரசங்களும் முடிவுகளும் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்கின்ற வகையில் அமைந்திருந்தன.

ஆர்.எஸ்.எஸ். கனவும் சட்டச் சிக்கலும்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற அடிப்படையை மீறி, தற்போதைய ஒன்றிய அரசு வந்தே மாதரம் பாடலை வைத்து அரசியல் செய்கிறது. 2016-ஆம்ஆண்டில் வந்தே மாதரத்தின் 150-ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி வந்தேமாதரத்தைப் பிளந்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். சதிக் கோட்பாட்டைப் பேசினார். அரசியல் நிர்ணய சபை நீக்கியவரிகளையும் இணைத்து தற்போது அதற்குச் சட்ட வடிவம் கொடுக்க முயல்கின்றனர். இது ஆர்.எஸ்.எஸ். கனவை நனவாக்கும் முயற்சியாகவே உள்ளது. நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைக்க இது ஒரு மறைமுக வழியாகும்.

நீதியரசர் ஹரி பரந்தாமன் மற்றும் தற்போது உச்சநீதிமன்றத்தின் வழக்குகளும் சுட்டிக்காட்டுவது போல, வந்தே மாதரம் முழுப் பாடலும் எங்கும் கட்டாயமாக்கப்படவில்லை. விழாக்களில் பாடப்படும்போது அவமதிக்கக் கூடாது என்பதே சட்டமாகும். தற்போதைய ஒன்றிய அரசின் நோக்கம் எதிர்காலத்தில் மதச்சார்புள்ள வந்தே மாதரம் முழுப் பாடலைத் தேசியகீதமாக்குவதே ஆகும். “ஒட்டகம் கூடாரத்தில் நுழைவது போல்” உள்ள அதன் நோக்கத்தைத் தொடக்கத்திலேயே நாம் தடுத்தாக வேண்டும்.

தமிழ்நாடு அரசு “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு” முதலிடம் வழங்குவது போல், வந்தே மாதரம் பாடலுக்குச்சட்டப்படியான கட்டாயம் இல்லை என்பதை உணர்ந்து, இதைப் பற்றிய தனது மௌனத்தைக் கலைத்துத்சட்டமன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இதன் மூலம் மதச்சார்பின்மைக் கொள்கையைக் காப்பதுடன், ஒன்றிய அரசின் திசைதிருப்பும் அரசியலையும் தமிழ்நாட்டில் உறுதியோடுமுறியடிக்க முடியும். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தியக் குடியரசின் பன்முகத்தன்மையைப் பேணவும் ஜனநாயக சக்திகள் அனைவரும் இத்தகைய சட்டத் திணிப்புகளை எதிர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.