வந்தே மாதரம் பாடலில் மதவழிபாட்டு வரிகளைக் கட்டாயமாக்குவதை கைவிடுக!
20 Jul 2026, 8:58 pm

வந்தே மாதரம் பாடலில் மதவழிபாட்டு வரிகளைக் கட்டாயமாக்குவதை கைவிடுக!

ஒன்றிய பாஜக அரசுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 20 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, மாநிலப் பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தேசப்பற்று பாடல் அல்ல!

‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயப்படுத்தும் வகை யில் ஒன்றிய அரசு தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ‘வந்தே மாதரம்’ பாடல் தேசப்பற்று பாடலாக இயற்றப்பட்டதல்ல. “ஆனந்தமடம்” எனும் நாவலில் ஒரு கதாபாத்திரம் பாடும் பாடல். ஒரு நாட்டை இந்து தெய்வங்களின் உரு வமாக பாவித்து வழிபடுவதாக வரும் பாடல். அது இந்திய தேசத்திற்காகப் பாடப்பட்ட பாடல் அல்ல. மேலும் அந்த பாடலில் இந்து தெய்வங்களின் பெயர்கள் தான் குறிப்பிடப்படுகிறதே ஒழிய எந்த இடத்திலும் இந்தியா என்றோ பாரத் என்றோ குறிப்பிடவில்லை.

நிர்ணய சபை ஏற்கவில்லை!

எனவே தான், அரசியல் சட்ட நிர்ணய சபையில் ‘ஜன கண மன’ எனும் கவி ரவீந்திரநாத் தாகூரின் பாடல் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. வந்தே மாதரத்தை தேசிய கீதமாக அங்கீகரிக்க மறுத்த அரசியல் நிர்ணய சபை, வந்தே மாதரம் பாடலில் இந்து தெய்வங்களின் பெயர்களைத் தாங்கி வரும் பகுதிகளைத் தவிர்த்து இதர பாடலை தேசியப் பாடலாக ஏற்றுக் கொண்டாலும் அதற்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து கொடுக்கவோ அல்லது அதைப் பாடுவதைக் கட்டா யப்படுத்தவோ இல்லை. இது நாள்வரை அது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் மட்டுமே அது பாடப்பட்டு வந்தது.

அரசியலமைப்புக்கு எதிரானது

ஆனால், ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முன் னெடுக்கும் இப்பாடலை, அரசு நிகழ்ச்சிகள் அனை த்திலும், தேசிய கீதத்திற்கு முன்னதாகப் பாட வேண்டு மென ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதோடு, இப்பாடலைப் பாட மறுத்தால் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதை தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மதச்சார்பற்ற அரசியல் சட்டத்திற்கு விரோதமான முறையில் சிறுபான்மையினரின் அரசியல் சட்டப்படி யான உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டுவர உத்தேசித்துள்ள இம்மசோதாவைக் கைவிடுமாறும், மீறி கொண்டு வந்தால் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இம்மசோதாவை முறி யடிக்குமாறும், மதச்சார்பற்ற சக்திகள் இதற்கு எதிராக அணி திரளுமாறும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகிறது.