முந்தய பக்கம்

வந்தே மாதரம் எந்த  அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல - அகிலேஷ்

8 Dec 2025, 4:39 pm
வந்தே மாதரம் எந்த  அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல - அகிலேஷ்
<p><strong>வந்தே மாதரம் எந்த &nbsp;அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல - அகிலேஷ்</strong></p> <p>வந்தே மாதரம் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல என &nbsp;சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகி லேஷ் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். &nbsp;வந்தே மாதரத்தின் 150 ஆவது ஆண்டு விழாவையொட்டி &nbsp;பாஜக அரசு &nbsp;நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதத்தை நடத்தியது. இது தொடர்பான மக்க ளவை சிறப்பு விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், &ldquo;ஆளும் பாஜக அனைத்தை யும் அரசியல் ஆதாயத்திற்காக சொந்த மாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. &lsquo;வந்தே மாதரம்&rsquo; சுதந்திரப் போ ராட்டத்திற்கும், இந்திய மக்களுக்கும் சொந்தமானது, எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. நாட்டின் கோடிக்க ணக்கான மக்களை விழித்தெழச் செய்யும் பாடலை வழங்கியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. &lsquo;வந்தே மாதரம்&rsquo; வெறுமனே பாடப்ப டுவதற்காக அல்ல, மாறாக வாழ்வை &nbsp;நடத்துவதற்கானது, கடந்த சில பத்தாண்டுகளை பாருங்கள், பாஜகவை சேர்ந்த எத்தனை நபர்கள் அதற்கேற்ப வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் தான் முன்பு தேசத்தை காட்டிக் கொடுத் தார்கள். இப்போதும் கூட அவர்கள் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள். பிரிவினை சக்திகள் இன்று இந்த தேசத்தை துண்டாட விரும்புகின்றன. &nbsp;சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்காதவர்களுக்கு, வந்தே மாதரம் பாடலைக் கொண்டாடுவது பற்றி &nbsp;என்ன தெரியும்?&rdquo; என கடுமையாக பாஜக அரசை விமர்சித்துள்ளார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram