அரசே கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு பட்டா வழங்க மறுப்பது ஏன்? வந்தவாசியில் இஸ்லாமிய மக்கள் கேள்வி
26 Jun 2026, 12:41 am
<p><strong>அரசே கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு பட்டா வழங்க மறுப்பது ஏன்? வந்தவாசியில் இஸ்லாமிய மக்கள் கேள்வி</strong></p><p>திருவண்ணாமலை, ஜூன் 25- தமிழகத்தில் நீண்ட காலமாக பாய் நெசவு தொழில் சிறப்பாக நடைபெற்று வருவது, திருவண்ணாமலை மாவட்ட ம்‘ வந்தவாசி யாகும்.. வந்தவாசி நகரத்தில் பாய் நெசவு செய்து வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு, திமுக கலைஞர் ஆட்சி காலத்தில் , வந்தவாசிக்கு அருகாமையில் உள்ள பிருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் 25 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. நகரத்தில் வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்கள் கிராம பகுதிக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அந்த மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இந்த நாள் வரை பட்டா வழங்கவில்லை. இதனால் மிகப்பெரிய மன உளைச்சலில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு தலைமுறையாக மக்கள் வாழ்ந்து வரும் அந்த வீடுகளுக்கு பட்டா கேட்டால், அது மேய்க்கால் புறம்போக்கில் இருப்பதாக அரசு அதிகாரிகள் தற்போது தெரிவிக்கின்றனர். நகரத்தில் வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களுக்கு, அரசாங்கமே வீடு கட்டிக் கொடுத்து கிராமத்திற்கு அனுப்பியதோடு அல்லாமல், அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் கிடைக்காததால் தவித்து வருகின்றனர். இஸ்லாமிய மக்கள் வசிக்கும் இடத்தை உடனடியாக வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் கைப்பட கடிதம் எழுதி, மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் வட்டாட்சியருக்கு ஆகியோருக்கு பரிந்துரை வழங்கியுள்ளார் அப்படி இருந்தும் அந்த மக்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. அதையடுத்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பாக வியாழன் அன்று (ஜுன்.25) வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தியில் இஸ்லாமிய மக்களுக்கு பட்டா வழங்க்க்கோரி மனு அளிக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பட்டா வழங்கவில்லை என்றால், அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என சிறுபான்மை மக்கள் நல குழு நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்வில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அப்துல் காதர் தலைமையில், கா. யாசர் அராபத் மற்றும் பிருதூர் ஜமாத்தார்கள் மற்றும் கிராம முஸ்லிம் பெண்கள் பேரணியாக, கோரைப்பாய், கோரை கட்டுக்களுடன் பெருந்திரளாக திரண்டு சென்று வட்டாட்சியர் ஜெயவேலிடம் மனு அளித்தனர். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.</p>
