செங்கொடி இயக்கத்தின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி! பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
16 Jun 2026, 11:58 pm
<p><strong>செங்கொடி இயக்கத்தின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி! பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா</strong></p><p>வந்தவாசி, ஜூன் 16- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வீட்டுமனை பட்டா இன்றி தவித்து வந்த ஏழை, எளிய பழங்குடியின மக்களுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தன. மனு அளித்தல், முற்றுகைப் போராட்டம் மற்றும் குடியேறும் போராட்டம் எனத் தொடர் நடவடிக்கைகளை செங்கொடி இயக்கம் மேற்கொண்டது. இதன் பலனாக, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (ஜூன் 16) நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், 16 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி இரா. சரவணன், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்த பயனாளிகள், போராட்டத்திற்குத் துணையாக இருந்த இயக்கங்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.</p>
