தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல் கொள்முதல் செய்தும் பணம் வழங்கவில்லை: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசப் போராட்டம்!

8 Jul 2026, 1:36 am
நெல் கொள்முதல் செய்தும் பணம் வழங்கவில்லை:  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  விவசாயிகள் ஆவேசப் போராட்டம்!
<p><strong>நெல் கொள்முதல் செய்தும் பணம் வழங்கவில்லை: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசப் போராட்டம்!</strong></p><p>வந்தவாசி, ஜூலை 7- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்த விவசாயிகளுக்கு, கடந்த மூன்று மாதங்களாகப் பணம் வழங்கப்படாததைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வந்தவாசி தாலுகா சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் கீழ் செயல்படும் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்திருந்த னர். ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் விவசாயிகளுக்கான பணம் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து போராடி வரு கின்றனர். இரு வாரங்களுக்கு முன்பு நடை பெற்ற போராட்டத்தின்போது, “நான்கு நாட்களில் பணம் பட்டுவாடா செய்யப்படும்” என்று வந்தவாசி வட்டாட்சியர் உறுதியளித்திருந்தார். ஆனால், இரண்டு வாரங்கள் கடந்தும் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் களத்தில் இறங்கினர். மீண்டும் உறுதிமொழி செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் ந. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிபிஎம் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். பென்னாட்டகரம், மழையூர், தெள்ளூர், கொடுங்காலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த வட்டாட்சியர், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, “விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்குவது குறித்து மாநில அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது; விரைவில் நிதி விடுவிக்கப்படும்” என்று மீண்டும் அதே உறுதியை அளித்தார். அதிகாரிகளின் இந்தத் தொடர் வாக்குறுதிகளை நம்பி, விவசாயிகள் போராட்டத்தை தற்காலிக மாக நிறைவு செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.