தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீண்ட காலப் போராட்டத்திற்கு வெற்றி வந்தவாசியில் 22 இஸ்லாமிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா

17 Jun 2026, 11:26 pm
நீண்ட காலப் போராட்டத்திற்கு வெற்றி  வந்தவாசியில் 22 இஸ்லாமிய  குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா
<p><strong>நீண்ட காலப் போராட்டத்திற்கு வெற்றி வந்தவாசியில் 22 இஸ்லாமிய குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா</strong></p><p>திருவண்ணாமலை,ஜூன் 17 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நீண்ட காலமாகப் போராடி வந்த 22 இஸ்லாமியக் குடு ம்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. வந்தவாசி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த இஸ்லாமிய மக்கள், ஆக்கிர மிப்பு என்ற பெயரில் அங்கி ருந்து வெளியேற்றப் பட்டனர். இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் கடந்த 2021- ஆம் ஆண்டு அதே இடத் தில் அவர்கள் குடிசை அமைத்து வசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பி னும், சில சமூக விரோதிகள் அந்த வீடுகளைத் தீயிட்டு எரித்ததால், அவர்கள் மீண்டும் வாடகை வீடுகளில் வசிக்கும் நிலைக்குத் தள்ள ப்பட்டனர். தங்கள் உரிமையைப் பெற, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் விளைவாக, தற்போது 22 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப் பட்டுள்ளது. பட்டா வழங்கும் விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன் வழங்க, பயனாளிகள் அதனைப் பெற்றுக் கொண்டனர். தங்களுக்கு நீதி பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவிற்கும் இஸ்லாமிய மக்கள் மன மார்ந்த நன்றிகளைத் தெரி வித்துக் கொண்டனர். இந்நிகழ்வில், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவர் கா.யாசர் அராபத், வட்டக்குழு உறுப்பினர் சிவக்குமார், கட்சி வட்டாரச் செயலாளர் அப்துல் காதர், கிளைச் செயலாளர் கா. சபனாஹஸ்மி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜீனத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.