தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வண்டலூர் பூங்காவில் பாதுகாப்பு குளறுபடி! கூண்டிலிருந்து சிறுத்தைப் பூனை தப்பியோட்டம்!

7 May 2026, 2:35 am
வண்டலூர் பூங்காவில் பாதுகாப்பு குளறுபடி! கூண்டிலிருந்து சிறுத்தைப் பூனை தப்பியோட்டம்!

வண்டலூர் பூங்காவில் பாதுகாப்பு குளறுபடி! கூண்டிலிருந்து சிறுத்தைப் பூனை தப்பியோட்டம்!

சென்னை, மே 6- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரி யல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரிதான பெண் சிறுத்தைப் பூனை ஒன்று கூண்டிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் இருந்து ஒரு ஜோடி சிறுத்தைப் பூனைகள் வண்டலூர் கொண்டு வரப்பட்டன.

இவை புனர்வாழ்வு மையத்தில் தனியாகப் பரா மரிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளியன்று கரடி கூண்டுக்கு எதிரே உள்ள நரி கூண்டிற்கு மாற்றப்பட்டன.

நரிகள் கூண்டின் மேல் ஏறாது என்பதால் அதன் மேற்பகுதி பாதுகாப்பற்ற முறையில் இருந்துள்ளது.

ஆனால், கூண்டின் மேலேறும் தன்மை கொண்ட சிறுத்தைப் பூனை, கம்பிகளுக்கு இடையே இருந்த ஓட்டை வழியாகத் தப்பி காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

சிறுத்தைப் பூனை தப்பியதை அறிந்த பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது தனிக்குழு அமைக்கப்பட்டு இரவு பகலாகத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

பெண் பூனை சிக்காத பட்சத்தில், ஆண் சிறுத்தைப் பூனையை கூண்டில் வைத்து பெண் பூனையை ஈர்த்துப் பிடிக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ‘சேரு’ என்ற ஆண் சிங்கம் கூண்டிலிருந்து தப்பி மூன்று நாட்களுக்குப் பிறகு தானாகத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

வண்டலூர் பூங்காவில் விலங்குகள் இறப்பது மற்றும் தப்பிச் செல்வது தொடர்கதையாகி வருவது நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுவதாகவும், இது பார்வை யாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறி யாக்குவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“புதிய கூண்டில் விலங்குகளை விடும் முன்பு முறையான ஆய்வு செய்யாத அதிகாரிகளின் அலட்சி யமே இதற்கு முக்கியக் காரணம்” என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.