வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆசிய சிங்கங்கள் வருகை இந்தூர் பூங்காவுடன் விலங்குகள் பரிமாற்றம்
13 May 2026, 11:56 pm

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆசிய சிங்கங்கள் வருகை இந்தூர் பூங்காவுடன் விலங்குகள் பரிமாற்றம்

சென்னை, மே 13- சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விற்கு, விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வனவிலங்கு பாது காப்பு, இனப்பெருக்க மேம்பாடு மற்றும் பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வந்த 14 வயதான 'வீரா' என்ற சிங்கம், இடுப்பு எலும்பு தேய்மானக் கோளாறால் பாதிக்கப் பட்டு கடந்த 2025-ம் ஆண்டு உயிரி ழந்தது.

அதன் பிறகு பூங்காவின் சிங்கங்கள் சபாரி அனுபவத்தை மேம்படுத்தவும், மரபணு பல்வகைத் தன்மையைப் பாதுகாக்கவும் இந்த புதிய சிங்கங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன.

ற்போது நடைமுறையில் உள்ள சுகாதார நெறிமுறைகளின்படி, இந்தச் சிங்கங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் நான்கு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே பொதுமக்கள் பார்வைக்கு அனு மதிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் சிங்கங்கள் தவிர, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் மற்றும் ஒரு பெண் காட்டுக்கோழி ஆகியவையும் வண்ட லூர் பூங்காவிற்கு வந்துள்ளன.

இதற்குப் பதிலாக வண்டலூர் பூங்கா விலிருந்து ஒரு நீர்யானை, இரண்டு தீக்கோழிகள் மற்றும் நான்கு மஞ்சள் அனகொண்டாக்கள் இந்தூர் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பரிமாற்றத் திட்டங்கள் உயிரியல் பூங்காக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, அழியும் நிலையில் உள்ள உயிரி னங்களைப் பாதுகாக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.