தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் ஆட்சியர், சிபிஎம் சார்பில் மரியாதை

17 Jul 2026, 10:23 pm
சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் ஆட்சியர், சிபிஎம் சார்பில் மரியாதை
<p><strong>சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் ஆட்சியர், சிபிஎம் சார்பில் மரியாதை</strong></p><p>தென்காசி, ஜூலை 17- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வாஞ்சி நாதன் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை முத்துச்சாமி பூங்காவில் அமைந்துள்ள அவ ரது மணிமண்டபத்தில் வெள்ளியன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மரு. கலை கதிரவன் ஆகியோர் தியாகி வாஞ்சிநாதன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர் மன்றத் தலைவர் ராமலெட்சுமி, தியாகி வாஞ்சிநாதனின் வாரிசுதாரர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா. நவீன் பாண்டி யன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை மணிமண்டபத்தில் அமைந் துள்ள வீர வாஞ்சிநாதன் திருஉருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தாலுகா குழு உறுப்பினர் பி.ராஜகோபால், முகமது காசிம், விவசாய சங்க தாலுகா தலைவர் சின்னச்சாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.