தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வானதி சீனிவாசனின் “கந்தன் எக்ஸ்பிரஸ்” பிராடு பாஜகவின் ‘பொய் மார்க்கெட்டிங்’ தந்திரம்

10 Dec 2025, 4:08 pm
வானதி சீனிவாசனின் “கந்தன் எக்ஸ்பிரஸ்” பிராடு பாஜகவின் ‘பொய் மார்க்கெட்டிங்’ தந்திரம்
<p><strong>வானதி சீனிவாசனின் &ldquo;கந்தன் எக்ஸ்பிரஸ்&rdquo; பிராடு பாஜகவின் &lsquo;பொய் மார்க்கெட்டிங்&rsquo; தந்திரம்</strong></p> <p>&lsquo;பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த அரசியல் மார்க்கெட்டிங் டீம்&rsquo; என்ற வரிகள், இன்றைய அரசியலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நூறு &nbsp;சதம் பொருந்தும். சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு இன்றுவரை, உண்மையைப் &nbsp;பொய்யாகவும், பொய்யை உண்மையாக வும் உரக்கப் பேசி, அதை மக்கள் நம்பும்படி செய்யும் வித்தை இவர்களுக்கு அத்துப்படி. &nbsp;வானதி சீனிவாசனின் ஆதாரமற்ற அறிவிப்பு இந்நிலையில், ஒரு புதிய பொய்யைக் கட்டி எழுப்பும் பாஜகவின் பாணியை, அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலை வரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் ஏற்று அம்பலமாகியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், &ldquo;இந்திய ரயில்வே தமிழகம் மற்றும் பிற மாநிலங் களுக்குச் செல்லும் ரயில்களுக்கு அழகான &nbsp;தமிழ்ப் பெயர்களைச் சூட்டி கெளரவித்து வரும் வேளையில், தற்போது தேஜஸ் எக்ஸ்பி ரஸ் ரயிலுக்கும் பெயரை மாற்றி &lsquo;கந்தன் &nbsp;எக்ஸ்பிரஸ்&rsquo; என்று பெயர் சூட்டியுள்ளது வர வேற்கத்தக்கது. வருகின்ற தை முதல்நாள் முதல் இந்த ரயிலானது முருகக் கடவுளின் முதல்படை வீடாம் திருப்பரங்குன்றம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது முருக பக்தர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது&rdquo; என்று குறிப்பிட்டு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தென்னக ரயில்வேக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரி வித்திருந்தார். ஆனால், தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது சென்னை &nbsp;எழும்பூர் முதல் மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும், இந்த ரயிலுக்குப் &nbsp;பெயர் மாற்றம் செய்யப்பட்டதோ அல்லது திருப்பரங்குன்றம் வரை நீட்டிக்கப்படுவதோ குறித்து ரயில்வே துறை எந்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பையும் வெளியிட வில்லை. &lsquo;பிராடு&rsquo; அம்பலமானதும் நீக்கப்பட்ட பதிவு இந்த உண்மை கண்டறியப்பட்டதும், நெட்டிசன்கள் வானதி சீனிவாசனை கடுமை யாக விமர்சனம் செய்தனர். மதுரை மற்றும் &nbsp;கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் &nbsp;தராத ஒன்றிய அரசின் மீதான அதிருப்தியை &nbsp;மடைமாற்றவும், அரசியல் லாபத்திற்காக வும் வானதி சீனிவாசன் பொய் செய்தி வெளி யிட்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டினர். &lsquo;தேசிய பொறுப்பிலும், சட்டமன்ற உறுப்பின ராகவும் உள்ளவர் எப்படி மக்களை ஏமாற்ற லாம்?&rsquo; என்று சமூக ஊடகங்களில் அவர் வறுத்தெடுக்கப்பட்டார். நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த வானதி சீனிவாசன், உடனடியாக அந்தப் பதிவினைத் தனது சமூக வலை தளப் பக்கத்திலிருந்து நீக்கினார். ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினரே, அரசி யல் ஆதாயத்திற்காக, ஆதாரம் இல்லாத பொய்ச் செய்தியைப் பரப்பி, பின்னர் அதைக் &nbsp;கூச்சமின்றி நீக்கியது, பாஜகவின் &lsquo;பொய் மார்க்கெட்டிங்&rsquo; தந்திரத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. கோயபல்ஸ் தத்துவத்தின்படி, &ldquo;ஒரு பொய்யை இடைவிடாமல் உரக்கப் பேசினால் &nbsp;மக்கள் அதை நம்புவார்கள்&rdquo; என்ற தத்து வத்தைப் பிழையின்றிச் செயல்படுத்தி வரும் &nbsp;பாஜகவின் அரசியல் களத்தில், உண்மைக்கும் &nbsp;பொய்க்கும் இடையிலான கோடு மெலிந்து கொண்டே வருகிறது. &lsquo;வளர்ச்சி&rsquo; என்ற மாயைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இந்த &nbsp;அரசியல் நாடகங்கள் முடிவுக்கு வரும்போது, மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்பது நிதர்சனம் மட்டுமல்ல, காலம் கற்றுத் தந்த அனுபவமும்கூட! அ.ர.பாபு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.