125 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா
6 Nov 2026, 12:26 am

125 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா

வாணாபுரம், நவ.5-கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே எடுத்தனூர், பழைய சிறுவங்கூர், பொறுப்பாளம்பட்டு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வி.பி-ஜி ராம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) 125 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, வாணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணித்தளப் பொறுப்பாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நபர்களாக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், புதியவர்கள் நியமிக்கப்பட்டும் பழையவர்களே பணியில் ஈடுபடுவதாகவும், கிராமங்களில் வேலைகள் முறையாக நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், பணித்தளப் பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாணாபுரம் வட்டாரவளர்ச்சி அலுவலகம் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.