முந்தய பக்கம்

வனப்பேச்சிக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு

15 Mar 2026, 4:11 pm
வனப்பேச்சிக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு
<p><strong>வனப்பேச்சிக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 15- வனப்பேச்சி என்னும் பேரண்டச்சி நாடகத்திற்கு ஈரோட்டில் உற்சாக வரவேற் பளிக்கப்பட்டது. ஈரோடு கொங்கு கலை யரங்கில் ஈரோடு நாடகக் கொட்டகை மற்றும் சென்னைக் கலைக்குழு இணைந்து வழங்கிய வனப்பேச்சி என்கிற &nbsp;பேரண்டச்சி நாடகம் சனியன்று மாலை அரங் கேறியது. இந்நிகழ்விற்கு, மாவட்ட ஆட்சியர் &nbsp;ச.கந்தசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க &nbsp;மாநில துணைத்தலைவர் பிரளயன் இயக் கிய நாடகத்தில் திரைக்கலைஞரும், தமுஎகச &nbsp;மதிப்புறுத் தலைவருமான ரோகினி முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். அக்னி &nbsp;ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் நக்கீரன், பழங்குடி சங்கத் தலை வர் வி.பி.குணசேகரன், சென்னை சில்க்ஸ் &nbsp;நிறுவனத் தலைவர் விநாயகம் ஆகியோர் &nbsp;வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாவட்டச் செய லாளர் இ.கலைக்கோவன் தொகுத்து வழங்கி னார். நாடக அரங்கம் நிரம்பியதைத் தொடர்ந்து, வெளியில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஏராளமானோர் கண்டு களித்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram