வால்பாறை டவுனை சூழ்ந்த மூடுபனி: காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி
8 Jun 2026, 11:27 pm
<p><strong>வால்பாறை டவுனை சூழ்ந்த மூடுபனி: காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி</strong></p><p>வால்பாறை, ஜூன் 8- வால்பாறை நகரப் பகுதியை நேற்று அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், நகரின் பல பகுதிகள் வெண்மையான பனிப்போர்வையால் மூடப்பட்டு காண ப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெது வாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தாக்கம் காரண மாக கடந்த சில நாட்களாக மேக மூட்டம், அவ்வப்போது சாரல் மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சி யான காலநிலை நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் மூடுபனி பரவலாக காணப்படுகிறது. நகரின் முக்கிய சாலைகள், தேயிலைத்தோட்டங்கள் மற்றும் சுற்றுப் புற மலைச்சரிவுகள் அனைத்தும் பனி மூட்டத்தில் மறைந்து காணப்பட்ட தால், வழக்கமான பரபரப்புக்கு மாறாக அமைதியான சூழல் நிலவி யது. சில இடங்களில் பார்வைத் திறன் குறைந்ததால் வாகன ஓட்டி கள் கவனத்துடன் இயக்க அறிவுறுத்த ப்பட்டு உள்ளனர். காலநிலை மாற்றத் தால் பகல் நேரத்திலும் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவு வதால் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் குளிரை உணர்ந்த னர்.</p>
