வால்பாறை தியாகிகள் தினம்: சிஐடியுவினர் அனுசரிப்பு
27 Jan 2026, 3:28 pm
<p><strong>வால்பாறை தியாகிகள் தினம்: சிஐடியுவினர் அனுசரிப்பு</strong></p>
<p>வால்பாறை, ஜன. 27- தேயிலை தோட்டத் தொழி லாளர்கள் நடத்திய கூலி உயர்வு போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தொழிலா ளர்களின் 69 ஆவது ஆண்டு நினைவுதினம் சிஐடியு சார்பில் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 1956 ஆம் ஆண்டு, வால் பாறை தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள், ‘குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை’ அமல்படுத்தக் கோரி 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை காவல் நிலையம் முன் புள்ள மைதானத்தில் திரண்டு போராடினர். எழுச்சிகரமான தொழி லாளர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக் கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதில் செங் கொடி இயக்கத்தின் முன்னணி ஊழியர்களான அப்பாரு, குரு சாமி, பழனி, ஞானமுத்து உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே வீர மரணமடைந்தனர். இத்தியாகிகளின் நினைவு தினத்தை ஓவ்வொரு ஆண்டும், சிஐடியுவினர் எழுச்சியுடன் அனுச ரித்து வருகின்றனர். இதன்ஒருபகு தியாக, 69 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு, சிஐடியு வால் பாறை பகுதி செயலாளர் பி.பரம சிவம் தலைமை ஏற்றார். அரசு விரைவு போக்குவரத்துக் கழக மாநில பொதுச் செயலாளர் எம். கனகராஜ் முன்னிலை வகித்தார். வால்பாறை தியாகிகள் நினை விடத்தில் சிஐடியு மாநிலப் பொரு ளாளர் எஸ். ராஜேந்திரன் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். பின் னர், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற காவல் நிலையம் முன்பு சிஐடியு வினர் மலர் தூவி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இத னைத்தொடர்ந்து, அக்கா மலை பேருந்து நிலையம் முன்பாக நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், சிஐடியு மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந் திரன், மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வேலுச்சாமி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உரையாற்றி னர். இந்நிகழ்வில் திரளானோர் பங் கேற்றனர்.</p>
<p> </p>
