தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை

27 Oct 2026, 11:31 pm
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை

கோவை, அக்.27-வால்பாறை அடுத்த சோலையார் டேம் ஜே ஜே நகர் பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டதால் நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையார் அணை ஜே ஜே நகர் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியில் எந்தவித ஆவணங்கள் இன்றி புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு தங்கும் விடுதியாக செயல்பட்டு வருகிறது. இதனையறிந்த வருவாய் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை பலமுறை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், அதை கண்டு கொள்ளாத நிலையில், செவ்வாயன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை ஆணையாளர் வெங்கடலஷ்மணன் தாசில்தார் அரசகுமார் மற்றும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் தலைமையில் அப்பகுதியில் புறம்போக்கு தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாயன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஹோம் ஸ்டே தங்கும் விடுதிகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மீண்டும் நடவடிக்கைகள் தொடரும் என ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிகழ்வில், வால்பாறை வருவாய் துறை தாசில்தார் அரசகுமார், நகராட்சி ஆணையாளர் வெங்கடலஷ்மணன், நகராட்சி அமைப்பு அலுவலர் ஜெயேந்திரவேல, வால்பாறை காவல்துறை ஆய்வாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் சுரேந்தர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.