தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வல்லநாட்டில் பெண் மாற்றுத்திறனாளியின் வீடு இடிப்பு அதிகாரிகளின் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

10 Oct 2026, 10:14 pm
வல்லநாட்டில் பெண் மாற்றுத்திறனாளியின் வீடு இடிப்பு அதிகாரிகளின் மனித உரிமை  மீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வல்லநாட்டில் பெண் மாற்றுத்திறனாளியின் வீடு இடிப்பு அதிகாரிகளின் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தக்கலை, அக்.10–தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், புல்டோசர் மூலம் பெண் மாற்றுத்திறனாளி வசித்த வீட்டை இடித்த காவல்துறை, நீதித்துறை, வருவாய்துறையினரின் கூட்டான மனித உரிமை மீறலைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, வசவப்பபுரம் ஊராட்சியில் உள்ள அனவரதநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பெண் மாற்றுத்திறனாளி முத்துரத்தினம் (55). இவரது கணவர் கணபதியும் மாற்றுத்திறனாளி. கணபதிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், முதல் மனைவி இறந்துவிட்டார்.

இவர்களுக்கு பால்துரை என்கிற மகனும், பிரம்மமுத்து என்கிற மகளும் உள்ளனர். கணபதிக்கும் அவரது சகோதர

ருக்கும் இடையே சொத்து வழக்கு உள்ளது. முத்துரத்தினத்திற்கோ அவரது பிள்ளைகளுக்கோ குடும்ப சொத்திலும் இந்த வழக்கிலும் எவ்வித தொடர்பும் இல்லை. 2017 இல் கணபதி இறந்துவிட்டார்.

இந்த நிலையில் பிள்ளைகள் பால்துரை, பிரம்மமுத்து பெயர்களில் அரசு மனைப்பட்டா வழங்கிய நிலத்தில் மாற்றுத்திறனாளி முத்துரத்தினம் வீடுகட்டி வசித்து வந்தார். பெயரில் எந்த சொத்தும் இல்லை. கடந்த 21.9.2026 தேதியிட்ட அறிவிப்பு ஒன்றை முத்துரத்தினத்திடம் முறப்பநாடு காவல் ஆய்வாளர் அளித்துள்ளார். ஆனால், அதில் அவரது மூத்தார் மகன் மகாராஜன் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் வருவாய்துறை, நீதித்துறை, மின்துறை, காவல்துறையினர் புல்டோசருடன் வந்து முத்துரத்தினம் குடியிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

முன்விரோதம்-காவல்துறையின் பழிவாங்கல்

இச்சம்பவம் குறித்து முத்துரத்தினம் கூறுகையில், என் மகன் பால்துரை மர்மமான முறையில் 23.3.2023 அன்று மரணமடைந்தார். நியாயம் கேட்ட என்னை ஏட்டு புஸ்பலதா தாக்கியதில் மயக்கமாகி

விட்டேன். பொதுமக்கள் போராட்டம் நடத்தியதோடு என்னை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாக ஏட்டு புஸ்பலதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கவே எனது வீட்டை புல்டோசர் வைத்து காவல்துறையினர் இடித்துள்ளனர். எனக்கு நீதி வேண்டும் என்றார். காவல்துறையினரின் பழிவாங்கலுக்கு துணைநின்ற இதர துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வல்லநாடு புறக்காவல் நிலையம் அருகில் அக்டோபர் 9 வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.ஜெபஸ்டின்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சி.முருகேசன், மாவட்ட தலைவர் கே.பி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செ.மாரியப்பன் உள்ளிட்டோர் பேசினர். பாதிக்கப்பட்ட முத்துரத்தினம் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.