தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 Nov 2025, 4:58 pm

கோவையில் 13 வீடுகளில் கொள்ளை; உ.பி.யைச் சேர்ந்த 3 பேர் சுட்டுப்பிடிப்பு!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கவுண்டம்பா ளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 பவுன் நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய வழக்கில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் ‘ஏ’ மற்றும் ‘சி(3)’ பிளாக்குகளில் மொத்தம் 13 வீடுகளில் வெள்ளியன்று ஒரே நாளில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில், நில எடுப்புப் பிரிவு வருவாய் அலு வலர் வீட்டில் மட்டும் 30 பவுன் நகைகள் உட்பட மொத்தம் 56 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் திருடப் பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்ப டையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு மேற் கொண்டு, குனியமுத்தூர் அருகே குளத்துப்பாளையத்தி லுள்ள வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதைக் கண்டு பிடித்தனர். தொடர்ந்து, அவர்களைப் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் தலைமைக் காவலர் பார்த்திபனை அரி வாளால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்றனர். இதனால், போலீ சார் தற்காப்புக்காக மூவரின் கால்களிலும் துப்பாக்கியால் சுட்டு, அவர்களைக் கைது செய்தனர். பிடிபட்ட ஆசிப் (48), இர்பான் (45), ஆரிப் கஜிவாலா (60) ஆகிய மூவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். கொள்ளையர்களால் காயமடைந்த தலை மைக் காவலர் பார்த்திபனும் சிகிச்சை பெற்று வருகிறார். விசா ரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரை இயக்கம்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், நான்கு எக்ஸ்பி ரஸ் ரயில்கள் மேலும் ஐந்து நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பணிகள் முடிவடையாததால், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை தாம்பரம் ரயில் நிலையம் வரையே இயக்கப்படும். அதேபோல், மேற்கண்ட நான்கு ரயில்களின் திரும்பும் சேவைகள் டிசம்பர் 1 முதல் 5 வரை தாம்பரம் ரயில் நிலை யத்தில் இருந்தே புறப்படும். சென்னை எழும்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1 முதல் 5 வரை சென்னை கடற் கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

எனது உரிமையை யாராலும் திருட முடியாது: ராமதாஸ்

சென்னை: பாமக தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை யில் தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறி வித்த நிலையில், நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், அன்பு மணியின் தலைவர் பதவிக் காலம் முடிந்து விட்டதாகவும், தேர்தல் ஆணையத்தை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார். தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சிப்பதாகவும், எனது உரிமையை யாராலும் திருட முடி யாது என திட்டவட்டமாக கூறினார். சட்டமன்றத்தில் பாமக பிரதிநிதித்துவம் குறைந்ததற்கு அன்புமணியின் செயல்பாடுகளே காரணம் எனவும் சாடி னார். இனி வெல்லப்போவது ராமதாஸ்தான் என உறுதியாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தை கண்டித்து தில்லி யில் போராட்டம் நடத்தவுள்ளதாக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

சென்னையில் வள்ளலார் பன்னாட்டு மாநாடு

சென்னை: 2026 ஜனவரியில் வள்ளலார் சுத்த சன்மார்க்க பன்னாட்டு மாநாடு சென்னையில் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வெளிநாடு களிலிருந்து வரும் சன்மார்க்க அன்பர்களுக்கான வசதி கள், மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவ முகாம், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், விருது வழங்கல், பெண்கள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். துறை அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க சங்கங்களின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார். வடலூர் சர்வதேச மையத்திற்கு ரூ.99.90 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.